"பருவம் எய்திய இஸ்லாமியப் பெண் மணம் செய்துகொள்ள தகுதியானவர்" - மும்பை உயர் நீதிமன்றம்

"பருவம் எய்திய இஸ்லாமியப் பெண் மணம் செய்துகொள்ள தகுதியானவர்" - மும்பை உயர் நீதிமன்றம்
"பருவம் எய்திய இஸ்லாமியப் பெண் மணம் செய்துகொள்ள தகுதியானவர்" - மும்பை உயர் நீதிமன்றம்

பருவம் எய்திய இஸ்லாமிய பெண், தான் விரும்பியவரை மணம் புரிய தகுதியுடையவராகிறார் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மத தனி நபர் சட்டங்கள் குறித்த புத்தகத்தை மேற்கோள் காட்டி இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு புது மண தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 36 வயது இஸ்லாமிய ஆண் ஒருவரும் 17 வயது இஸ்லாமிய பெண் ஒருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் அதற்கு இரு குடும்பத்தாரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் 18 வயதை எட்டாமல் இருந்தாலும், பருவம் எய்தினாலே இஸ்லாமிய தனி நபர் சட்டப்படி திருமண தகுதி வந்துவிடுவதாகவும், எனவே தங்கள் திருமணத்தை அங்கீகரித்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com