"நாங்க கூடுறதே அழுறதுக்காகத்தான்” - மும்பையில் உதயமான CRYING CLUBகள்!
இந்திய பெருநகரங்களில் HOMOUR CLUB எனும் சிரிப்பு மன்றங்களைப் போலவே, இப்போது கூடி அழுவதற்கென்றே CRYING CLUB-கள் உருவாகிவருகின்றன. இதன் நோக்கம் என்ன பார்க்கலாம்... என்ன இவங்க எல்லாம் இப்படி கூடி, குமுறிக் குமுறி அழுறாங்க... எதாவது நடக்கக் கூடாதது நடந்திருக்குமோ என்று பதறாதீங்க. இது ஒரு க்ளப் மீட்டிங். இவங்க கூடுறதே அழுறதுக்காகத்தான். மும்பையில ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இந்த கிளப்புக்கு, ‘தி க்ரையிங்க் கிளப்’னு பேரு. அழுது தங்களோட கவலைகளைப் போக்க நினைக்குறவங்க இந்த க்ரையிங்க் கிளப்க்கு போகலாம்...
ஒரு தடவை வந்து பாருங்க எப்படிக் கதற கதற அழவைக்கிறோம்னு சவால் விடுறாங்க இவங்க. டிஷ்யூ பேப்பர், டீ எல்லாம் கொடுத்து நல்லா அழச் சொல்லி உற்சாகப்படுத்துவாங்களாம். ஏன்யா இந்த வேண்டாத வேலைன்னு கேட்டா, “வாய்விட்டு அழுதா மனபாரம் குறையும், ஸ்ட்ரஸ் போய்டும், நிம்மதியான தூக்கம் வரும்”னு சொல்றாங்க. எல்லாத்துக்கும் மேல, இது ஜப்பானில் நடைமுறையில இருக்கிற Ruikatsu என்ற உணர்வு சிகிச்சையின் தொடர்ச்சின்னும் சொல்றாங்க. ஜப்பான்காரன் சொன்ன சரியாத்தான் இருக்கும். சீக்கிரமே நம்ம ஊருக்கும் இந்த கிரையிங் கிளப் வர வாய்ப்பிருக்கு!