’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு

’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு

’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’  என கொரோனா பாதித்த மருத்துவர் வெளியிட்ட கடைசி பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. 

மும்பையைச் சேர்ந்த காசநோய் நிபுணர் டாக்டர் மனிஷா ஜாதவ் சேவ்ரி டிபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக செயல்பட்டு வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 51 வயதான மனிஷா திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தான் பிழைக்கமாட்டேன் என்பதை உணர்த்தும்விதமாக, ‘’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம். இங்கு உங்களை நான் மீண்டும் சந்திக்கமுடியாமல் போகலாம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உடல் இறக்கலாம்; ஆனால் ஆத்மா அல்ல. ஆத்மா அழியாதது’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த போஸ்ட்டை பதிவுசெய்த 36 மணிநேரத்தில் அவர் உயிரிழந்தது குறித்து பல மருத்துவர்களும், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் நேற்று, மும்பையைச் சேர்ந்த மருத்துவர் திருப்தி கிளாடியா, ‘’நாம் உதவியற்று நிற்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையை இதற்குமுன்பு பார்த்ததில்லை. மக்கள் பீதியில் இருக்கிறார்கள்’’ என்று அதிர்ச்சியுடன் கண்ணீர்மல்க வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com