அம்மாவைக் கொன்று ரத்தத்தில் ஸ்மைலி! இது மும்பை ஷாக்!
பெற்ற தாயை மகனே கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அதிலுள்ள இரத்தத்தால் ஸ்மைலி வரைந்துவிட்டு எஸ்கேப் ஆன சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
மும்பையை சேர்ந்த போலீஸ் ஆய்வாளர் தியானேஸ்வர். இவரது மனைவி திபாலி. தியானேஸ்வர், இந்தியா முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை குழுவில் இடம் பெற்றிருந்தவர். இந்நிலையில் அவரது மனைவி, அவர்களின் மகனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, பணம் தொடர்பாக திபாலிக்கும் மகன் சித்தாந்திற்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சித்தாந்த் தனது தாயை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாயை ஆத்திரத்தில் கத்தியால் குத்திக்கொன்று விட்டு அதன் அருகே ரத்தத்தால் ஸ்மைலி வரைந்திருக்கிறார் சித்தாந்த். மேலும் அதன் அருகே, ‘அவரால் சோர்வடைந்துவிட்டேன். என்னைப் பிடித்து தூக்கிலிடுங்கள்’ என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.