அதிவேகத்தில் தாறுமாறாக பி.எம்.டபுள்யூ கார் ! சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்

அதிவேகத்தில் தாறுமாறாக பி.எம்.டபுள்யூ கார் ! சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்
அதிவேகத்தில் தாறுமாறாக பி.எம்.டபுள்யூ கார் ! சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்

குடி போதையில் அதிவேகமாக சொகுசு காரை ஓட்டிச்சென்றவரை சினிமா பாணியில் 4 கி.மீ துரத்திச்சென்று போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் கிட்வாய் சாலையில் இரவு 12.30 மணியளவில் சொகுசுக் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் செல்லும் வாகனங்களையும், பாதசாரிகளையும் இடித்துச் சென்றுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மும்பை போலீசார் சொகுசு காரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் சொகுசு காரின் அதிவேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனையடுத்து போலீசாரும், மற்ற இருசக்கர வாகன ஓட்டிகளும் 4 கிமீ தூரம் துரத்திச்சென்று சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். 

விசாரணையில் சொகுசு காரை ஓட்டிச்சென்றவர் மெஹ்மூத் அலாம் என்றும், ஆனால் அந்த சொகுசு காரின் உரிமையாளர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. விபத்திற்கும் ஒரு நாளைக்கு முன்பே காரின் உரிமையாளர் துபாய் சென்றதாகவும் அவருடைய காரை ஓட்டியே மெஹ்மூத் விபத்தை ஏற்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய மெஹ்மூத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com