இந்தியா
டிஜிட்டல் யுகத்திலும் ரூ.31 கோடிக்கு பேப்பர் வாங்கும் மாநகராட்சி
டிஜிட்டல் யுகத்திலும் ரூ.31 கோடிக்கு பேப்பர் வாங்கும் மாநகராட்சி
நாடு முழுவதும் மின்னணு முறைக்கு மாறிவரும் நிலையில், ரூ.31 கோடிக்கு பேப்பர் வாங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் மின்னணு முறையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களில் கூட பதிவுகள் அனைத்தையும் மின்னணு முறையில் பதிவு செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரிஹான் மும்பை மாநகராட்சி 2016-2018 ஆண்டுக்கு தேவையான 10 விதமான பேப்பர்களை ரூ.31 கோடி செலவில் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை மும்பை மாநகராட்சியின் நிலைக்குழு முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர், பள்ளிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் காகித உபயோகம் அதிகமாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.