\
Bullet train
Bullet trainReuters

மணிக்கு 320 கி.மீ வேகம்! கடலுக்கு அடியில் புல்லட் ரயில்! மாஸ் காட்டும் இந்தியா!

மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.
Published on: 
Summary

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை, மும்பை முதல் அகமதாபாத் வரை 508 கி.மீ தூரத்தில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதில் 7 கி.மீ கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை, பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. 2030-க்குள் முழுமையான சேவை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

அதிவேகமாக செல்லக் கூடிய ரயில்களை தான் புல்லட் ரயில்கள் என்று அழைக்கிறார்கள். இந்த ரயிலின் முன்புற பகுதி, கூம்பு வடிவத்தில் கூர்மையாக இருப்பதால், இந்த ரயிலுக்கு புல்லட் ரயில் என்ற பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது. முதலில் ஜப்பானில் அறிமுகமான இந்த ரயில் சேவை, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், சீனா, தென்கொரியா, தைவான், இந்தோனேசிய போன்ற ஆசிய நாடுகளிலும், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், இந்த ரயில்சேவை எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்று, பல்வேறு தரப்பினர் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பான பல்வேறு சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில், சுமார் 508 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய புல்லட் ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக, மும்பை நகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பாந்த்ரா குர்லா வளாகத்தில் இருந்து ஷில்வாடா பகுதி வரை, சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், 7 கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையானது, பூமி மற்றும் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 25 முதல் 55 மீட்டர் ஆழத்தில், மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

bullet train
bullet trainReuters

இந்த புல்லட் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு அதிகம் என்பதை கூற வேண்டும் என்றால், உதாரணத்திற்கு சென்னையில் இருந்து கண்ணியாகுமரிக்கு செல்ல வெறும் 2 மணி நேரம் தான் ஆகும். அந்த அளவிற்கு வேகமான ரயிலாக இது உருவாகி வருகிறது. நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை முதல் அகமதாபாத் வரையிலான முழுமையான வழித்தடமும் 2030-க்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.