மும்பை கார் விபத்தில் ஏர்பேக் தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
மும்பை கார் விபத்தில் ஏர்பேக் விரிவடைந்து, 6 வயது சிறுவன் உயிரிழப்பு
இப்பொழுது தயாரிக்கப்படும் நவீன கார்களில் விபத்திலிருந்து தப்பிப்பதற்காக முன் இருக்கையில் ஏர்பேக் பொருத்தப்படுகிறது. இந்த ஏர் பேக்கே சில சமயம் எமனாக மாறி உயிரை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு கார் விபத்தில், ஏர்பேக் விரிவடைந்ததால் முன் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்து இருந்த 2 வயது குழந்தை மூச்சுத்திணறி இறந்தது. அதே போன்று ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹர்ஷ்மாவ்ஜி அரேதியா என்ற 6 வயது சிறுவன்பானி பூரி சாப்பிட ஆசைப்பட்டு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய அவரது தந்தையும் தனது மகனை அழைத்துக்கொண்டு தனது வேகன் ஆரில் சென்றுள்ளார்.
இவரது கார் சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது, இவரது காருக்கு முன்னால் சென்ற எஸ்யூவி கார்மீது அதி வேகத்தில் மோதியதில், வேகன் ஆரின் முன் இருக்கையில் இருந்த ஏர்பேக்கானது வேகமாக விரிந்துள்ளது. இதனால் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த ஹர்ஷ்மாவ்ஜி அரேதியா, ஏர்பேக்கினால் தாக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்கள் உடனடியாக சிறுவன் ஹர்ஷ்மாவ்ஜிஅரேதியாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பாலிட்ராமா அதிர்ச்சியால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏர்பேக்
ஏர்பேக் என்பது நமது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு சாதனம், கார் விபத்துக்குள்ளானால், மூளை ,கழுத்து மற்றும் முதுகெலும்பு காயங்கள் உட்பட பல கடுமையான மற்றும் அசையாத காயங்களுக்கள் ஏற்படாமல் இருக்க தயார் செய்யப்படுகிறது.
ஆனால் விபத்து சமயங்களில் அதிவேகத்தில் இது விரிவடையும்பொழுது, அதிர்ச்சி, முச்சுத்திணறல் போன்ற காரணங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.