சாக்கடைகளில் அடைப்பு: டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீது குப்பைகளை கொட்டவைத்த எம்.எல்.ஏ

சாக்கடைகளில் அடைப்பு: டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீது குப்பைகளை கொட்டவைத்த எம்.எல்.ஏ
சாக்கடைகளில் அடைப்பு: டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீது குப்பைகளை கொட்டவைத்த எம்.எல்.ஏ

சாக்கடையை முறையாக தூர்வாராத ஒப்பந்ததாரரை மழைநீர் தேங்கிக்கிடக்கும் சாலையில் அமர வைத்து, அவர் மீது பொதுமக்கள் மூலம் எம்எல்ஏ ஒருவர் குப்பைகளை அள்ளிக்கொட்ட வைத்த சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

மும்பையில் பெய்துவரும் கனமழையால் கன்டிவெலி பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தொகுதி சிவசேனா எம்எல்ஏ திலிப் லண்டே, தூர்வாரும் பணிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரை வரவழைத்து, அவரைக் கட்டாயப்படுத்தி மழைநீர் தேங்கிக் கிடக்கும் சாலையில் அமர வைத்தார். பின்னர் பொதுமக்களில் இரண்டுபேரை அழைத்து, அந்த ஒப்பந்ததாரர் மீது, குப்பைகளை அள்ளிப்போடச் செய்தார்.

 இதுதொடர்பாக பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட எம்எல்ஏ திலிப் லண்டே, ”சாக்கடைகளை தூர்வாருவதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருப்பவர்கள் அப்பணியை சரிவர மேற்கொள்ளாததால், மழைக்காலத்தில் சாலைகளில் மழைநீர் தேங்குவதாக கூறினார். எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்திருக்கும் மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது தனது கடமை” என்று  விளக்கமளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com