\
பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு பரிசுகளை அனுப்பி வைத்த மும்பை டப்பாவாலாக்கள்!

பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு பரிசுகளை அனுப்பி வைத்த மும்பை டப்பாவாலாக்கள்!

பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு பரிசுகளை அனுப்பி வைத்த மும்பை டப்பாவாலாக்கள்!
Published on

பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்கலுக்கு அண்மையில் பிறந்த குழந்தைக்கு மகாராஷ்டிராவில் உள்ள டப்பாவாலாக்கள் நகைகளை பரிசாக அனுப்பி வைத்தனர். 

கடந்த ஆண்டு நடந்த பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்கல் திருமணத்துக்கு மும்பையில் உள்ள மதிய உணவு விநியோக தொழிலாளர்களான டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு பரிசாக வழங்க டப்பாவாலா சங்கம் சார்பில் வெள்ளியால் ஆன கொலுசு, வளையல், இடுப்பு கொடி, செயின் மற்றும் தங்கத்தில் ஹனுமன் டாலர் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டன. இளவரசர் சார்லஸ் காலத்த‌லிருந்தே இந்த நட்பு தொடர்வதால் இதை சிறப்பிக்கும் வகையில் டப்பாவாலாக்கள் சங்கம் சார்பில் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது‌.

அலுவலகங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று குறிப்பிட்ட அலுவலகங்களுக்குச் சென்று  உரிய நேரத்தில் வழங்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் டப்பாவாலாக்கள் . வருடம் முழுவதும் இவர்கள் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com