
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மக்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்ததுள்ளனர். இதனிடையே முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139 அடியாக குறைக்க ஒப்புதல் கேட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் அளித்து பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், அதில் கட்டமைப்பு ரீதியாக முல்லைப் பெரியார் அணை பலமாக இருப்பதால் முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருந்தார்.
Also Read -> பாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு!
இதனிடையே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி இடுக்கியை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் அணையின் நீர் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், தற்போதைய சூழல் கவனிக்கப்பட வேண்டி இருப்பதாக கூறினார். மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பது குறித்து அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு கலந்தோலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், அணையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பாக 2 குழுவும் எடுக்க முடிவை தமிழக அரசு மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து பிற்பகல் 2 மணிக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை நடத்த உள்ளது. நீர்மட்டத்தை குறைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து பேரிடர் மேலாண்மை குழு உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்கும்.