இந்தியா
நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த மனு மீது நாளை தீர்ப்பு
நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த மனு மீது நாளை தீர்ப்பு
கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய ஆணை பிறப்பித்துள்ளது. இதனிடையே தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் கருணை மனு அளித்திருந்தார்.
இந்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து முகேஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷன், போபண்ணா அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.