பதவி விலகுகிறார் சிறுவர்களின் மனதை கவர்ந்த முகேஷ் கண்ணா..?

பதவி விலகுகிறார் சிறுவர்களின் மனதை கவர்ந்த முகேஷ் கண்ணா..?
பதவி விலகுகிறார் சிறுவர்களின் மனதை கவர்ந்த முகேஷ் கண்ணா..?

இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நடிகர் முகேஷ் கண்ணா தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் குழுத்தலைவராக பதவி வகித்து வருபவர் நடிகர் முகேஷ் கண்ணா. இவர் 'சக்‌திமான்'  சீரியல் மூலமாக குழந்தைகளின் மனதை கவர்ந்தவர். இந்நிலையில் மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறி இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கான படங்களை விளம்பரப்படுத்துவதற்காக ஒளிபரப்புத்துறை அமைச்சகம் போதிய நிதியை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சிறுவர் திரைப்பட கழகத்தின் குழுத்தலைவராக முகேஷ் கண்ணாவை நியமனம் செய்தது. மூன்றாண்டு காலம் தலைவராக இருப்பார் என்ற அடிப்படையில் அவர் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com