ராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி!

ராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி!

ராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராஞ்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.

தோனி, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்படும் முன்பே, ராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாகக் கூறி இரண்டு மாதம் விடுப்பை அறிவித்தார். அதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான சிக்கில் தீர்ந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிரா ன தொடர் வரவுள்ளது. அதில் அவர் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளதாகத் தகவல் வெளியானது. 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக ஜார்கண்ட் சென்றுள்ளார். அவர் நேற்று கும்லா மாவட்டத் துக்குச் செல்ல இருந்தார். கன மழை காரணமாக அவர் தனது திட்டத்தை ரத்து செய்துவிட்டு ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் தங்கியிருந்தார். இதையடுத்து தோனி, அவரை அங்கு சந்தித்துப் பேசினார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com