பாஜகவில்தான் அதிக அளவிலான குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்கள்: ஆய்வில் தகவல்...

பாஜகவில்தான் அதிக அளவிலான குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்கள்: ஆய்வில் தகவல்...

பாஜகவில்தான் அதிக அளவிலான குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்கள்: ஆய்வில் தகவல்...
Published on

நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.க்களாக இருப்பவர்களில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் 30 சதவிகிதம் பேர் என ஏடிஆர் என்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் அளித்திருக்கிறது. கட்சி ரீதியாக குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் எத்தனை பேர்? என பார்க்கலாம்.

மக்களவைக்கு கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரு தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று, காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது என்ற பெருமையை பெற்றது. அதேபோல், குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் நிறைந்த கட்சியாகவும் தற்போது பாரதிய ஜனதா உருவெடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளில் பாரதிய ஜனதாவில்தான் அதிக அளவிலான குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். அந்தக் கட்சியில் மொத்தம் உள்ள எம்.பி.க்களில் 87 பேர் குற்றப் பி்ன்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதிகப்பட்சமாக பாபு ராவ் சோயம் என்ற எம்.பி மீது மட்டும் 52 வழக்குகள் உள்ளன.

காங்கிரஸை பொருத்தவரை குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் 19 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது 8 வழக்குகளும், ராகுல் காந்தி மீது 5 வழக்குகளும், சோனியா காந்தி மீது ஒரு வழக்கும் உள்ளது. காங்கிரஸில் அதிகப்பட்சமாக இடுக்கி எம்.பி.யான டீன் குரியாகோஸ் மீது 204 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதேபோல் திமுகவில் 7 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது அதிகப்பட்சமாக தலா 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீதும் ஒரு வழக்குப்பதிவு உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் 3 எம்.பி.க்களும், சமாஜ்வாதி கட்சியில் 2 எம்.பி.க்களும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்திருக்கின்றது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 2 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 8 எம்.பி.க்கள், எஸ்ஹெ‌ச்எஸ் கட்சியில் 5 எம்.பி.க்கள், லோ‌க் ஜனசக்தி கட்சியில் 3 எம்.பி.க்கள், ஏஐடிசி கட்சியில் 4, தேசியவாத காங்கிரஸில் 2, ஐஎன்டி 2, ஏஐஎம்ஐஎம் கட்சியில் 2, சிரோமணி அகாலி தளம், ஏஐயூடிஎஃப், அப்னா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்‌பி.க்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com