ம.பி: தண்ணீர் பிரச்னையை போக்க மலையிலிருந்து கிராமத்திற்கு வாய்க்கால் அமைத்த பெண்கள்

ம.பி: தண்ணீர் பிரச்னையை போக்க மலையிலிருந்து கிராமத்திற்கு வாய்க்கால் அமைத்த பெண்கள்
ம.பி: தண்ணீர் பிரச்னையை போக்க மலையிலிருந்து கிராமத்திற்கு வாய்க்கால் அமைத்த பெண்கள்


மத்திய பிரதேசம் சதார்பூர் மாவட்டம் அங்ரோதா கிராமத்தைச் சேர்ந்த 250 பேர் கொண்ட பெண்கள் குழுவினர் ஒன்றாக செயல்படுகின்றனர். இவர்கள் 18 மாதங்களாக முயற்சி எடுத்து, தண்ணீர் பிரச்னையைப் போக்க மலையிலிருந்து தங்கள் கிராமத்து குளம்வரை வாய்க்கால் அமைத்துள்ளனர்.

இதுபற்றி அந்த குழுவைச் சேர்ந்த பபிதா ராஜ்புட் கூறுகையில், மலையிலிருந்து வரும் தண்ணீர் வீணாக காடுகளுக்குள்தான் செல்கிறது. நாங்கள் இங்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். எனவே நாங்கள் பெண்கள் குழுவாகச் சேர்ந்து, மலையிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குளத்திற்கு தண்ணீர் பாயும்படி ஒரு வாய்க்கால் அமைத்தோம் என்று கூறுகிறார்.

விவிதாபாய் ஆதிவாசி கூறுகையில், எங்கள் கிராமத்தில் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. எங்கள் நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. எனவே 250 பெண்கள் ஒன்றாக சேர்ந்து 18 மாதங்களாக முயற்சிசெய்து இந்த வாய்க்காலை அமைத்துள்ளோம் எனக் கூறுகிறார்.

இதே ஊரைச் சேர்ந்த ராம் ரத்தன் சிங் ராஜ்புட் கூறுகையில், கடந்த 18 மாதங்களாக இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஊருக்கு தண்ணீர் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருந்தனர். எனவே மலையிலிருந்து மண்ணை வெட்டி, கற்களை அகற்றி தண்ணீர் லகுவாக வருவதற்கு வழியை அமைத்துள்ளனர் என ஏ.என்.ஐக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com