கணவர் அல்லாதவருடன் தொடர்பு வைத்த பெண்ணிற்கு விநோத தண்டனை

கணவர் அல்லாதவருடன் தொடர்பு வைத்த பெண்ணிற்கு விநோத தண்டனை

கணவர் அல்லாதவருடன் தொடர்பு வைத்த பெண்ணிற்கு விநோத தண்டனை
Published on

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வேற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பு வைத்ததாக கூறி திருமணமான பெண் ஒருவருக்கு கிராம மக்கள் விநோத தண்டனை அளித்துள்ளனர். புகாருக்குள்ளான பெண் அவரது கணவரை தோளில் சுமந்து செல்ல வேண்டும் என்பதே கிராம மக்கள் அளித்த தண்டனை. போபால் நகரிலிருந்து 340 கிமீ தொலைவிலுள்ள ஜபுவா மாவட்டத்தில் உள்ள தேவிகார் என்ற கிராமத்தில்  இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பெண் ஒருவர் இளைஞரை தோளில் சுமந்தவாறு வறண்ட விவசாய நிலத்தில் நடந்து செல்கிறார். அவரை சுற்றிலும் இளம், நடுத்தர, முதிய என அனைத்து வயதுடைய கிராம மக்கள் நடந்து செல்கின்றனர். அந்தப் பெண் சற்றே இளைப்பார நினைத்தால் நடக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். அந்தப் பெண் எவ்வித உதவியும் கிடைக்காமல் தொடர்ந்து நடக்கிறார். 

இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை தேடி வரு கின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com