பசு சிறுநீர் பினாயிலால் மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யணும் : மபி அரசு உத்தரவு
மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற முதல் 'பசு அமைச்சரவையில்', இனிபசு சிறுநீர் பினாயில் மூலம் மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் மாநில அரசு நடத்தும் மாடுகள் தங்குமிடங்களில் 180,000 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு உணவளிக்க ரூ .11 கோடியை கடந்த ஆண்டு ஒதுக்கியிருந்தது. மேலும் இந்தியாவின் முதல் பசு சரணாலயம் 2017 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தின் அகர் மால்வாவில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 472 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள காம்தேனு கெள அபியரன் எனும் இந்த இடத்தில் 6,000 மாடுகளை தங்க வைக்க முடியும், இருப்பினும், பின்னர் அது நிதி நெருக்கடிகளால் தனியார்மயமாக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மாநில அரசின் புதிய உத்தரவில், மத்திய பிரதேச அரசு அலுவலகங்கள் இனி பசு சிறுநீரில் செய்யப்பட்ட பினாயில் மூலம் மட்டுமே சுத்தம் செய்யப்படும் என அறிவித்தது. மாநில பொது நிர்வாகத் துறை (ஜிஏடி) சனிக்கிழமையன்று ஒரு உத்தரவை வெளியிட்டது, அதில் அனைத்து அரசு அலுவலகங்களும் வேதியியல் ரீதியாக தயாரிக்கப்பட்ட பினாயிலுக்கு பதிலாக பசு சிறுநீர் பினாயிலுக்கு மாற வேண்டும் என்று அறிவித்தது.
மத்தியபிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நவம்பரில் நடைபெற்ற முதல் 'பசு அமைச்சரவையில்' இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் பிரேம் சிங் படேல் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலமாக மாட்டு சிறுநீரின் பாட்டில் ஆலை அமைப்பதை ஊக்குவிப்பதும், மாட்டு பீனைல் தொழிற்சாலைகளை அமைப்பதும் ஆகும். " என்று கூறினார். இதற்கிடையில், அரசின் இந்த முடிவு பற்றிய செய்தி ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.