”இத எடுத்துட்டு போய் நான் பட்டப்பாடு இருக்கே...” - கோயில் நகையை திருடிய திருடன் உருக்கம்!

”இத எடுத்துட்டு போய் நான் பட்டப்பாடு இருக்கே...” - கோயில் நகையை திருடிய திருடன் உருக்கம்!
”இத எடுத்துட்டு போய் நான் பட்டப்பாடு இருக்கே...” - கோயில் நகையை திருடிய திருடன் உருக்கம்!

திருட்டு சம்பவங்கள் குறித்த சுவாரஸ்ய மற்றும் திடுக்கிடும் தகவல்கள் பலவும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள கோயிலில் அரங்கேறிய திருட்டு சம்பவம் அம்பலமாகியிருக்கிறது.

அதன்படி, மத்திய பிரதேசத்தின் பாலாகாத் மாவட்டத்தில் உள்ள லம்தா என்ற காவல்நிலைய கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவிலில் இருந்து கடந்த அக்டோபர் 24ம் தேதி வெள்ளி மற்றும் வெண்கலத்தாலான 10 அலங்கார பொருட்கள் களவாடப்பட்டிருக்கிறது.

கோயில் பொருட்களை திருடிச் சென்ற பிறகு அந்த திருடனுக்கு பல வகையில் கஷ்டங்களும், தொந்தரவுகளும் நேர்ந்ததால் மீண்டும் அதனை கோயிலேயே வைத்துவிட வேண்டும் என எண்ணி அதனூடே மன்னிப்பு கடித்தத்தையும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று லம்தா பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் வெளியே அடையாளம் தெரியாத பை ஒன்று வைக்கப்பட்டிருந்ததை கண்ட ஜெயின் குடும்பத்தினர் அதில் திருடப்பட்ட கோயில் பொருட்களோடு ஒரு கடிதமும் இருந்ததை பார்த்திருக்கிறார்கள்.

உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்ததும் உடனே விரைந்த காவல் கண்காணிப்பாளர் விஜய் தாபர் விசாரணையை மேற்கொண்டதில் மேற்குறிப்பிட்ட சம்பவம் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து திருடனின் அந்த கடிதத்தில் “என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் கோயில் பொருட்களை திருடிவிட்டேன். இதனால் பல வகையில் கஷ்டத்தை அனுபவித்துவிட்டேன்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக விஜய் தாபர் கூறியுள்ளார்.

அதன் பின்னர், அலங்கார பொருட்களை மீட்ட போலீசார் கோயிலில் கைவரிசை காட்டிய திருடனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com