மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கைது

மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கைது
மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கைது

நிதிநிறுவன மோசடி விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.சுதீப் பந்தோபாத்யாயவை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி மோசடி செய்ததாக, ரோஸ்வேலி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபஸ்பாலை சி.பி.ஐ கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. இந்த நிலையில் அக்கட்சியின் மற்றொரு எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயவுக்கும் சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான சுதீப்பை, 4 மணி நேர விசாரணை முடிவில் சி.பி.ஐ கைது செய்தது. சுதீப் பந்தோபாத்யாய் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார். இதில் பிரதமரின் துணிச்சலை காண விரும்புகிறேன் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com