மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 5 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு !

மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 5 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு !
மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 5 புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு !

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் சாலை விபத்தில் 5 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானிலிருந்து உத்தரப்பிரதேசம் சென்ற லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று காலை உயிரிழந்தனர். தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி உபியின் ஆரையா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜஸ்தானிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பாண்டா பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை லாரி ஒன்று ஏற்றி வந்துள்ளது.

இந்நிலையில் சாலி சாகர் மாவட்டத்தின் பாண்டா பகுதியில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் 5 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தத் தொழிலாளர்கள் மகாராஷ்ட்டிராவிலிருந்து உத்தரப் பிரசேதம் சென்றுகொண்டு இருந்ததாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் பூரியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் சொந்த மாநிலங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடிச் சென்ற மொத்தம் 29 தொழிலாளர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com