
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின நபர் மீது பாஜக நிர்வாகி என சொல்லப்பட்ட பிரவேஷ் சுக்லா என்பவர், மது போதையில் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரவேஷ் சுக்லாவின் மனைவி கஞ்சன் சுக்லா, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும், தனது கணவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்துள்ளதாகவும் கூறியும் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.