இந்தியா
உ.பி-யில் தாய்க்கு 'நெகட்டிவ்'; ஆனால், பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி
உ.பி-யில் தாய்க்கு 'நெகட்டிவ்'; ஆனால், பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி
வாரணாசியில் தாய்க்கு கொரோனா இல்லாத நிலையில் அவர் பிரசவித்த குழந்தை, கொரோனா தொற்றுடன் பிறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24ஆம் தேதி பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என முடிவு வந்தது. தாய்க்கு கொரோனா இல்லாத நிலையில் அவர் பிரசவித்த குழந்தை தொற்றுடன் பிறந்திருப்பது மருத்துவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், குழந்தைக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.