கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற அம்மா!

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற அம்மா!

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற அம்மா!
Published on

கணவனின் மருத்துவ சிகிச்சைக்காக பச்சிளங்குழந்தையை, பெற்ற தாயே விற்ற அவலம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் மிர்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு மவுரியா (30). இவர் கணவர் ஹர் ஸ்வரூப் (32). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தை பிறந்து 15 நாட்கள்தான் ஆகியுள்ளது. கட்டிட வேலை பார்த்து வந்த ஸ்வரூப், கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டிடத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார். இதில் அவரது முதுகெழும்பு உடைந்துவிட்டது. மூன்று மாதமாக மருத்துவமனையில் இருந்த அவருக்கு இப்போது ஆபரேஷன் செய்ய வேண்டும்.  பணம் இல்லாததால் தனது பச்சிளங்குழந்தையை 42, ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார் சஞ்சு.

இதுபற்றி சஞ்சு கூறும்போது, ’என் கணவருக்கு லக்னோ சென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். பலரிடம் கடன் கேட்டேன். பணம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நடுத்தர வயதுடைய ஒருவர், தன்னைப் பணக்காரர் எனக் கூறி அறிமுகமானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரிடம் குழந்தையை விற்று பணம் வாங்கினேன்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரிக்க, பரேலி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

வட மாநிலங்களிலும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், வறுமை காரணமாக குழந்தைகளை பெற்றோர் விற்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com