School Boypt desk
இந்தியா
பாதாளச் சாக்கடையில் தவறி விழுந்த பள்ளி சிறுவன்... சட்டென காப்பாற்றிய தாய்! #CCTV
புதுச்சேரியில் சாக்குபோட்டு மூடப்பட்டிருந்த பாதாள சாக்கடையில் பள்ளி சிறுவன் தவறி விழுந்துள்ளார். உடனடியாக பின்னால் வந்து கொண்டிருந்த மாணவனின் தாய் சிறுவனின் கையைப் பிடித்து வெளியே தூக்கி காப்பாற்றினார்.
புதுச்சேரியில் சாக்கு போட்டு மூடப்பட்டிருந்த பாதாளச் சாக்கடையில் பள்ளி சிறுவன் தவறி விழுந்தார். உடனடியாக பின்னால் வந்து கொண்டிருந்த மாணவனின் தாய், அவரது கையை பிடித்து வெளியே தூக்கி காப்பாற்றினார். கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் சிறுவன் விழுந்த காட்சியை காணலாம்.
தகவல் அறிந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மற்றும் அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் ஆகியோர்
சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து பாதாளச் சாக்கடை மூடப்படாமல் இருந்ததால், மாணவனின் பெற்றோர் மற்றும் அதிமுக மாநிலச் செயலாளர் ஆகியோர் சரமாரியான கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
‘இதுதான் தொழில்பக்தியா..?’ - சாமி கும்பிட்டுவிட்டு அம்மனிடமே திருட்டு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்