புனே கார் விபத்து சம்பவம்! தந்தை, தாத்தாவை தொடர்ந்து தாயும் கைது! விசாரணையில் அம்பலமான ’பலே’ மோசடி!

17 வயது சிறுவன் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி இருவரின் உயிரை பறித்த நிலையில், சிறுவனின் தந்தை, தாத்தா,மருத்துவர்கள், பார் ஊழியர்களை தொடர்ந்து தற்போது சிறுவனின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் தாய் -ஷிவானி அகர்வால்
சிறுவனின் தாய் -ஷிவானி அகர்வால்முகநூல்

17 வயது சிறுவன் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி இருவரின் உயிரை பறித்த நிலையில், சிறுவனின் தந்தை, தாத்தா,மருத்துவர்கள், பார் ஊழியர்களை தொடர்ந்து தற்போது சிறுவனின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கல்யாண் நகர் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை நேரத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர், மதுபோதையில் அதிவேகமாக Porsche ரக காரை இயக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தநிலையில், காரின் முன் சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் அனிஸ் துனியா, அஸ்வினி கோஸ்டா என்ற தம்பதியின் மீது அது மோதியுள்ளது. இந்தவிபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த அத்தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுவனுக்கு விபத்து நடந்த அடுத்த 15 மணி நேரத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால்,இதற்கு கண்டனங்கள் வலுத்ததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுவன், சிர்த்திருத்த பள்ளியிலும், சிறுவனின் தந்தை விஷால் அகர்வால்,மது வழங்கிய பாரின் ஊழியர் மற்றும் முதலாளி உட்பட மூன்று பேர் என இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுள்ளனர்.

மேலும், ’சிறுவன் இந்த விபத்தை நிகழ்த்தவில்லை, அவரின் குடும்ப ஓட்டுநர்தான் விபத்தை ஏற்படுத்தினார்’ என்று சிறுவனை காப்பாற்ற உண்மையை திரித்த சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, சிறுவன் மது அருந்தி இருக்கிறாரா? ன்பதை அறிய அவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதிலும் முறைகேடு நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த முறைக்கேட்டில் தொடர்புடைய சிறுவனுக்கு ரத்த பரிசோதனை செய்த தடவியல் மருத்துவர்கள் அஜய் தவாடே மற்றும் ஹரி ஹர்னூர் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்களை விசாரித்ததில், ரத்த மாதிரிகளை அகர்வாலின் குடும்பத்தினர் மாற்றுமாறு தெரிவித்ததாக கூறியிருந்தனர்.

சிறுவனின் தாய் -ஷிவானி அகர்வால்
புனே | மது அருந்திவிட்டு கார் ஓட்டிய சிறுவனை காப்பாற்ற தொடர்ந்து எல்லை மீறும் முறைகேடுகள்...!

இந்நிலையில், சிறுவனின் தாய் ஷிவானி அகர்வால் தான் சிறுவனின் ரத்த மாதிரிகளுக்கு பதிலாக தனது ரத்த மாதிரிகளை வைக்கும்படி மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார் என்று தற்போது தெரியவந்தது. இச்சூழலில் புனே காவல்துறையினர் ரத்த மாதிரி முறைக்கேடு வழக்கில் சிறுவனின் தாய் ஷிவானி அகர்வாலை கைது செய்துள்ளனர் என்பது தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com