பாம்பு தீண்டியது தெரியாமல் குழந்தைக்கு பாலூட்டிய தாய்

பாம்பு தீண்டியது தெரியாமல் குழந்தைக்கு பாலூட்டிய தாய்

பாம்பு தீண்டியது தெரியாமல் குழந்தைக்கு பாலூட்டிய தாய்
Published on

பாம்பு தீண்டியது தெரியாமல் குழந்தைக்கு தாய் பாலூட்டியதால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய அந்தத் தாய் இரவில் அசந்து உறங்கியுள்ளார். அப்பொழுது பாம்பு ஒன்று அவரை தீண்டிச் சென்றுள்ளது. தூக்கத்தில் இருந்ததால் அவரால் அதனை உணர முடியவில்லை. பாம்பு தீண்டியதை அறியாமல் காலையில் எழுந்து தனது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். 

பின்னர், தாய், சேய் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே தாயும், 3 வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாம்பு தீண்டியதில் உடலில் விஷம் பரவியிருந்ததால், அதனை அருந்திய குழந்தையும் பலியாகியுள்ளது. 

பின்னர், தாய் உறங்கிய அறைக்கு பக்கத்து அறையில் பாம்பு இருந்ததை உறவினர்கள் கண்டுள்ளனர். ஆனால், அந்தப் பாம்பு பிடிபடாமல் தப்பிச் சென்றுவிட்டது. பாம்புக் கடியில் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியாவில் 300 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. அதில் 60 பாம்பு இனங்கள் அதிக விஷமுள்ளவை. உலக அளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பாம்புக் கடி மரணங்கள் நிகழ்கிறது என்றால் இந்தியாவில் 46 ஆயிரம் நடக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com