
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று கைது செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவீரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ஷகீர் பஷீர் மாக்ரேவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்தனர். புல்வாமாவில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு சிஆர்பிஎஃப் வீரர்களை கொன்றதில் அகமது தார் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்தான் ஷகீர் பஷீர் மாக்ரே. இந்தக் குற்றச்சாட்டின் பெயரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.