கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் - இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளே அதிகம்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் - இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளே அதிகம்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் - இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளே அதிகம்
Published on

கேரளாவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் பெரும்பாலோனோர்கள் இரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் கேரளாவில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கேரளாவில்  223 நபர்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் 157 நபர்கள் ஆண்கள் 66 நபர்கள் பெண்கள். 116 நபர்கள் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 120 நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 54 நபர்கள் தமனி நோயால் பாதிக்கப்படிருந்த நிலையில் 36 நபர்கள் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தனர். பிற நோய்களால் பாதிக்கப்படாமல் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக கொல்லம் மாவட்டத்தில் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரத்தில் 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவைத் தவிர்த்து பிற ஏழு மாவட்டங்களில் 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் தலா 1 நபர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் பெரும்பான்மையான வயது 63 மேலாக இருந்துள்ளது. பிறந்து 7 மாதம் ஆன குழந்தையும் 97 வயதில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com