விமானத்திலும் விடாத கொசுத்தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ

விமானத்திலும் விடாத கொசுத்தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ

விமானத்திலும் விடாத கொசுத்தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ
Published on

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

கொல்லைப் புற வீடானாலும் சரி.. மாட மாளிகை ஆனாலும் சரி.. கொசுக்கள் நுழையாத இடம் எங்கும் இல்லை. இப்படி தரைக்கு கீழேதான் கொசுக்கள் சுற்றித் திரிந்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது என்று பார்த்தால் விமானத்திலும் கொசுத் தொல்லை இல்லாமல் இல்லை. லக்னோ விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், கொசுத் தொல்லையால் அவதிப்பட்ட நிலையில் அதனை அவர் வீடியோவாகவே எடுத்து வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், விமானத்தில் இருக்கும் பலரையும் கொசுக்கள் சுற்றி வளைக்கிறது. இதனால் அவர்கள் தங்கள் கைகளில் இருக்கும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் மூலம் கொசுக்களை விரட்டுகின்றனர். ஆனால் அதனையும் மீறி கொசுக்கள் பயணிகளை வளைப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனிடையே இண்டிகோ விமானத்திலும் கொசுத்தொல்லை இருப்பதாக மற்றொரு பயணி புகார் கூறியுள்ளார். லக்னோவிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்த சரோப் ராய் என்பவர், விமானத்தில் இருக்கும் கொசுத்தொல்லை குறித்து அங்குள்ளவர்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து புகார் கூறியதற்காக தன்னை விமானக் குழுவினர், விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டு மிரட்டியதாகவும் சரோப் ராய் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com