Headlines| 5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு to விஜய்யிடம் ஏழு மணி நேரம் சிபிஐ விசாரணை!
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்... தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல்...
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடக்கம்... வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6... வேட்புமனுவை திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாள்..
கேரளம், அசாம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்... 3 மாநிலங்களிலும் இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்...
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் சட்டமன்ற தேர்தல்... ஏப்ரல் 23 மற்றும் 29ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மே 4ஆம் தேதி நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை... மொத்தம் 824 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படுகின்றன...
6 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு... கோவா, கர்நாடகா, நாகலாந்து, திரிபுராவில் ஏப்ரல் 9ஆம் தேதியும், மஹாராஷ்டிரா, குஜராத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியும் இடைத்தேர்தல்...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்... 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் கட்டாயம்...
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றம்... மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணிகளைத் தொடங்கிய பறக்கும் படையினர்...
சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் கொடி அணிவகுப்பு... தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம், பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி பேரணி...
5 மாநில தேர்தல்களுக்காக இரண்டு லட்சத்து 18 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்... மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அறிவிப்பு...
8.5 லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு... சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும் எனவும் விளக்கம்...
தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் இடம்பெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு... வாக்குச்சாவடி முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் முடிவு...
18 வயது நிரம்பியும் இதுவரை வாக்காளர் ஆகாதவர்கள் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... இணையத்தில் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
5 மாநிலங்களிலும் 17.4 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்... தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேட்டி...
வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வேண்டுகோள்... முதல்முறை வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற அழைப்பு...
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கண்டிக்காமல் மனசாட்சியை அடகுவைத்துவிட்டார் பழனிசாமி... சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு...
கடந்த அதிமுக ஆட்சிதான் சிறுபான்மை மக்களின் பொற்காலம்... சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு...
கடந்த தேர்தலில் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்டுகள் இந்த முறை கூடுதல் இடங்கள் எதிர்பார்ப்பு... இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் 10 தொகுதிக்குள் அடக்க திமுக முயற்சி...
காங்கிரஸின் வேதனையை தோழமை கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள்... திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அழுத்தம் கொடுப்பது தொடர்பான கேள்விக்கு பதில்...
கூடுதல் தொகுதி குறித்து திமுகவிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை... திமுகவின் பதிலைப் பொறுத்து கூட்டணியில் தொடர்வதா என பரிசீலனை செய்யப்படும் என த.வா.க தலைவர் வேல்முருகன் பேட்டி...
சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்தது அதிமுக... கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி ஆகியோருக்கு இடம்...
10 பேர் கொண்ட தேர்தல் பரப்புரைக் குழுவை அமைத்தது அதிமுக.... விளம்பரக் குழு, சட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு...
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் 3ஆவது முறையாக ஆஜரானார் விஜய்... 7 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள்...
சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பினார் தவெக தலைவர் விஜய்... காரில் இருந்தவாறு மகிழ்ச்சியுடன் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறே சென்றார்...
விஜய்யின் தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிர முயற்சி... விஜயகாந்த் போல எதிர்க்கட்சி தலைவராகலாம் என விஜய்யிடம் பேசி வருவதாக தகவல்...
அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் வாழ்க்கை சூனியமாகிவிடும்... விசிக தலைவர் திருமாவளவன் கருத்து...
அதிமுக-பாஜக கூட்டணி 114-127 இடங்களை வெல்லும் என Matrize-IANS கணிப்பு... திமுக கூட்டணி 104-114 இடங்கள் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியீடு...
சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்... மத்திய அரசிடம் தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை என கண்டனம்...
வெளியுறவுக் கொள்கையிலும் ஃபெயிலியர் மாடல் என பெயரெடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்... ஒன்றிய பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு...
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்... வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
சென்னையை அடுத்த நாவலூரில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து... 2 குழந்தைகள் உயிரிழப்பு, 7 வயது சிறுவன் உட்பட 7பேர் படுகாயம்...
நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 தமிழர்கள் உயிரிழப்பு... 400 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சோகம்...
அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா... 98ஆவது விழாவில் விருதுகளை வாங்கிக் குவிக்கப் போகும் நட்சத்திரங்கள் யார்?
மேற்காசிய போர்ச் சூழலில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை... சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை...
ஈரான் முன்னாள் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்... கைது செய்யப்பட்ட 200 இளைஞர்களை விடுவிக்க கோரி ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்கள் குழு வலியுறுத்தல்...
காஃபி அருந்தும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.... ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி...
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கு திறந்திருக்கும்... ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு...
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அமெரிக்காவின் நான்கு விமானப்படை தளங்கள் மீது தாக்குதல்... கட்டளை மையங்கள், வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடவடிக்கை...
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தை நோக்கி ஒரே நாளில் 10 ட்ரோன்களை அடுத்தடுத்து செலுத்திய ஈரான்... அனைத்து ட்ரோன்களையும் இடைமறித்து அழித்துவிட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தகவல்...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் கடும் தாக்குதல்... ஹெஸ்புல்லா அமைப்பினரின் தளங்களை குறிவைத்து தகர்ப்பு...
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் ஆலோசனை... தொலைபேசி வாயிலாக பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசியதாக ஈரான் செய்தி நிறுவனம் தகவல்...
பாகிஸ்தானில் ரம்ஜானை ஒட்டி வழங்கப்பட்ட அன்னதான நிகழ்ச்சியில் திரண்ட மக்கள் கூட்டம்... எரிபொருள் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் வழக்கத்தை விட மிக அதிகளவில் குவிந்த மக்கள்...
வன்ஷிகா சிங்கை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ்... ஆடல் பாடல்களுடன் களைகட்டிய திருமண விழா...
பிரீமியர் லீக் கால்பந்து போட்டி விறுவிறுப்பான ஆட்டம்... ஆஸ்டன் வில்லா அணியை 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்...

