HEADLINES | டெல்லி கார் வெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு முதல் ஜடேஜாவை கைவிடும் சிஎஸ்கே வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்து சிதறியதால் பதற்றம்... கார்கள், ஆட்டோக்கள் என ஏராளமான வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் அலறியடித்து ஓடிய மக்கள்...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு... காயமடைந்த பெண்கள் உள்பட 20 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தேசிய பாதுகாப்பு படையினர், காவல் துறையினர், தடயவியல் துறையினர் ஆய்வு... டெல்லி தனிப்படை காவல் துறையினரும் இரவு முழுவதும் தீவிர விசாரணை...
கார் வெடிப்பு சம்பவம் நடந்த செங்கோட்டை பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு... விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி, விவரங்களை கேட்டறிந்தார்...
டெல்லி கார்வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை... முழு உண்மையை மக்கள் முன் வைப்போம் எனவும் உள் துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்...
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா... விசாரணை நிலவரம், தற்போதைய சூழல் குறித்து இருவரும் தீவிர ஆலோசனை...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்... ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல்...
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் உஷார் நிலை... உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பு...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் உஷார் நிலை... ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு...
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, திருப்பதி மலை முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு... சோதனையால் திருப்பதி மலை அடிவாரத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்...
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்... கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்திய காவல் துறை...
காஷ்மீர், ஹரியானாவில் காவல் துறை தேடுதல் வேட்டையில் 2 ஆயிரத்து 900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்... பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த மருத்துவர் உட்பட 7 பேர் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் கைது...
பிஹார் மாநிலத்தில் இன்று 2ஆவது மற்றும் கடைசி கட்டத் தேர்தல்... 122 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்...
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்... போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு...
சென்னை கண்ணகி நகரில் பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு... சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய இருவருக்கு காவல் துறை வலைவீச்சு...
டெல்லியில் இருக்கும் பிக் பாஸுக்கு பழனிசாமி ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்... எஸ்ஐஆர் விவகாரத்தில் சத்தமில்லாமல் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் பேச்சு...
எஸ்ஐஆர் என்றாலே திமுகவினர் அலறுவதாகவும், பதறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சனம்... உண்மைகளை எடுத்துரைக்கவே உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் விளக்கம்...
கிருஷ்ணகிரி நகராட்சி திமுக பெண் தலைவர் ஃபரிதா நவாப்பின் பதவி பறிபோனது... நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 27 பேரும் ஆதரவு...
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், குமரியில் நாளை கனமழை பெய்யும் என கணிப்பு...
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபங் வாங் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது... 8 பேர் உயிரிழப்பு, 14 லட்சம் பேர் இடம் மாற்றம்...
கனடாவில் தொடங்கியது பனிப்பொழிவு சீசன்... வெண்ணிற விரிப்பு போல் காட்சியளிக்கும் சாலைகள்...
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று பூடான் செல்கிறார் பிரதமர் மோடி... இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட நீர்மின் நிலையத்தை திறந்து வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்..
நவம்பர் இறுதியில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் 14ஆவது ஆடவர் இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள்... தொடருக்கான சின்னமாக காங்கேயன்சின்னத்தை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
ஒலிம்பிக்கின் பெண் பிரிவுகளில் திருநங்கை பெண்கள் போட்டியிடுவதைத் தடை செய்யும் கொள்கை... சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல்...
ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜாவை தந்துவிட்டு சஞ்சு சாம்சனை பெற சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்... தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பராக பயன்படுத்திக்கொள்ள முடிவு..
சென்னை அணியிலிருந்து ஜடேஜா மற்றும் சாம் கரன் இருவரையும் வெளியேற்றிவிட்டு, சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டிரேட் செய்யும் முடிவு முடிந்துவிட்டதாக, அடுத்த 48 மணிநேரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

