morning headlines for march 12th 2026
மோடி, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்எக்ஸ் தளம்

HEADLINES | எரிவாயு சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசின் அறிவுறுத்தல் முதல் பதவியேற்கும் ஆளுநர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, எரிவாயு சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசின் அறிவுறுத்தல் முதல் பதவியேற்கும் ஆளுநர் வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, எரிவாயு சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசின் அறிவுறுத்தல் முதல் பதவியேற்கும் ஆளுநர் வரை விவரிக்கிறது.

  • இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் சீராக இருக்கிறது... பொதுமக்கள் பீதி அடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்...

  • ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் விகிதம் 50 சதவீதம் அதிகரிப்பு... 11 நாட்களில் 15 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்...

  • ஹோர்முஸ் நீரிணை அருகே, இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து நாட்டு கப்பல், ஏவுகணை வீசி தகர்ப்பு... 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன 3 மாலுமிகளை தேடும் பணிகள் தீவிரம்...

  • ஓமனின் சலாலா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்... நல்வாய்ப்பாக வணிகக் கப்பல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஓமன் எரிசக்தி அமைச்சகம் தகவல்...

  • ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்... இலக்குகளை எட்டும் வரை கூட்டுத் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டம்...

  • உலகப் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான நீண்ட காலப் போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு... ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களைத் தாக்குவோம் என்றும் எச்சரிக்கை

morning headlines for march 12th 2026
PM ModiTwitter
  • தவெக உடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை... அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...

  • தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இன்று பதவியேற்கிறார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்... சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்...

  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி...

  • தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை.. இரண்டு நாட்களில் சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்வு...

morning headlines for march 12th 2026
ஈரான் போருக்கு மத்தியில் சரியும் தங்கம் விலை.. 3 நாளில் 4,600 குறைவு.. ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com