HEADLINES | ஜனநாயகன் பட வழக்கில் இன்று தீர்ப்பு முதல் மேஜிக் நிகழ்த்திய CSK பவுலர் வரை.!
திருவாரூர், நாகையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்... மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு...
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11ஆம் தேதி வரை மழை பெய்யும்... 11ஆம் தேதி மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்...
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என கணிப்பு... அம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையே கரையை கடப்பதால் இலங்கைக்கு எச்சரிக்கை...
வங்கக்கடலில் நிலவும் ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் கனமழை... மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்...
உங்கள் கனவைச் செல்லுங்கள் திட்டத்தை திருவள்ளூரில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்... மக்கள் கனவை ஒரு மாதத்தில் எப்படி நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவுக்கும் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்... உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமித் ஷா கூறியதாகவும் பேச்சு...
தேர்தல் கூட்டணி விவகாரத்தில், தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ. பன்னீர்செல்வம் பதில்... கூட்டணி குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பார்க்குமாறு பேட்டி...
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள டிடிவி தினகரன்... கூட்டணி தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டம் என தகவல்...
எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்... தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசிக்க வாய்ப்பு...
அதிக சீட் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி தரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்... தொகுதிகளை விட யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதே முக்கியம் என்றும் பேட்டி...
அதிமுகவுடன் அன்புமணி மேற்கொண்ட கூட்டணியை நாடகம் என விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ்... பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை எனவும் சாடல்..
வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை... அதிகாரப் பகிர்வு தொடர்பாக கருத்துகள் எழுந்துள்ள நிலையில் முக்கியத்துவம் பெறும் கூட்டம்..
கடலூர் பாசார் கிராமத்தில் இன்று நடக்கிறது தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு... சட்டமன்றத் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு.. காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்...
ஜனநாயகன் தணிக்கைச் சான்று விவகாரத்தில் விஜய்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு குரல்... நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும் என அறிக்கை...
ஜனநாயகன் பட விவகாரத்தில் பிரதமரை குறை சொல்வது மக்களை திசை திருப்பும் முயற்சி... திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம்...
ஜனநாயகன் படத்தை போன்று சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் சர்ச்சை... திட்டமிட்டப்படி படம் நாளை வெளியாகும் என படக்குழு உறுதி...
பராசக்தி பட ப்ரோமோஷன் விழாவில், நல்லதே நடக்கும் என்று அழுத்திச் சொன்ன சிவகார்த்திகேயன்... பராசக்தி ஹீரோடா என்ற ரஜினி டயலாக்கையும் பேசிக்காட்டிய சிவகார்த்திகேயன்...
கொல்கத்தாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் குறுக்கிட்ட விவகாரம்... மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை...
இந்தியாவில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது வங்கதேசம்... இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை என விளக்கம்...
அடுத்த மாதம் இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்... டெல்லியில் நடக்கும் செயற்கைநுண்ணறிவு தாக்க மாநாட்டில்பங்கேற்பார் என அறிவிப்பு...
ஐரோப்பிய நாடுகளை திணறடித்து வரும் பனிப்பொழிவு... குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்துள்ள பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ராணுவ அதிகாரத்திற்கு செனட் சபை கடிவாளம்... வெனிசுலா விவகாரத்தைத் தொடர்ந்துசிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்...
சிரியாவில் மீண்டும் தீவிரமெடுக்கும் அரசு மற்றும் குர்திஷ் படைகளுக்கு எதிரான மோதல்... ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக துருக்கியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்...
24H கார் பந்தியத்திற்கு தயாராகி வரும் நடிகர் அஜித் குமார்... இணையத்தில் வைரலாகும் அஜித்தின் வீடியோ...
2025-26 விஜய் ஹசாரே டிராபியில் கோவா அணிக்கு எதிராக இறுதி ஓவரை மெய்டனாக வீசி வென்றுகொடுத்தார் மஹாராஷ்டிரா பந்துவீச்சாளர் ராமகிருஷ்ண கோஷ்.. இவர் சிஎஸ்கே அணியில் ரீட்டெய்ன் செய்யப்பட்ட வீரராவார்..
கடைசி 3 ஓவரில் 11 ரன்கள் தேவையாக இருக்க 48வது ஓவர், 50வது ஓவர் என இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசி அசத்தினார் கோஷ்; கடைசி 6 பந்துக்கு 6 ரன்கள் என இருந்தபோது 0 ரன்னை விட்டுக்கொடுத்து வெற்றி

