morning headlines for january 22nd 2026
தமிழக அரசு, ind vs nzx page

HEADLINES | ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முதல் இந்திய அணியின் வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முதல் இந்திய அணியின் வெற்றி வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முதல் இந்திய அணியின் வெற்றி வரை விவரிக்கிறது.

  • தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று விவாதம்... சட்டம்-ஒழுங்கு பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்...

  • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..... வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்கவும் ஆணை.

  • மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை... பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் இருப்பார் என பயணத் திட்டத்தில் தகவல்

  • தாம் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி... வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு அவரிடம்தான் கேட்க வேண்டும் என பதில்...

  • தமிழகத்திற்கு மேலும் 3 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள் அறிவிப்பு... தாம்பரம், நாகர்கோவில் நகரங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு

morning headlines for january 22nd 2026
ஓ.பன்னீர்செல்வம்pt web
  • விசிக தலைவர் திருமாவளவனுக்கும், பாமகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார்.

  • சபரிமலை தங்க திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 1.3 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்...

  • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி...

  • தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம், சென்னை பனையூரில் விஜய் தலைமையில் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 23 பேருக்கு, பிப்ரவரி 3ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

morning headlines for january 22nd 2026
ஓபிஎஸ் - தவெக கூட்டணி? செங்கோட்டையன் சொன்ன வார்த்தைகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com