ஆளுநர் ஆர்.என் ரவி, ஜனநாயகன்
ஆளுநர் ஆர்.என் ரவி, ஜனநாயகன்Pt Web

HEADLINES| சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் To ஜனநாயகன் பட விவகாரம்!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் முதல் ஜனநாயகன் பட விவகாரம் வரை விவரிக்கிறது..
Published on

4ஆவது ஆண்டாக சட்டப்பேரவையில் உரையை முழுமையாக படிக்காமல் வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ஆர்.என். ரவி... உண்மைக்குப் புறம்பான தகவல்கள் உரையில் இடம்பெற்றிருந்ததாக ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு...

ஆளுநர் வெளிநடப்பு செய்தநிலையில் அவரது உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு ... ஆளுநர் என்பவர் அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கருத்து...

ஆளுநர் சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு... ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சி என்றும் சாடல்...

அதிமுகவை தொடர்ந்து சட்டமன்றத்திலிருந்து பாஜக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு... ஆளுநர் கூறியபடி தேசிய கீதத்தை இசைப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிடிவாதம் என வானதி சீனிவாசன் கேள்வி...

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவிPt Web

ஆளுநர் உரை தொடர்பாக கேரள சட்டமன்றத்திலும் சர்ச்சை.... மத்திய அரசை விமர்சிக்கும் வரிகளை ஆளுநர் படிக்கவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு...

பாஜக உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்... அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவும் திட்டம்...

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்... முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று இணைவார்கள் என எதிர்பார்ப்பு...

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை.... தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து கருத்துக்கேட்டு அறிக்கை தயாரிக்க முடிவு...

ஜனநாயகன் தணிக்கைச் சான்று வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்... அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

கரூர் குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து... ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்...

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

சென்னையில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நீடிக்கும்... குறைந்தபட்ச வெப்பநிலை 19 முதல் 20 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என்றும் கணிப்பு...

today gold rate
தங்கம்web

ஒரே நாளில் 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்தது ஆபரணத் தங்கத்தின் விலை... ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200ரூபாய்க்கு விற்பனை....

பிரதமர் மோடி முன்னிலையில் பாஜக தேசியத் தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபீன்... பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு...

பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுத்த நபின்... மலைக்குன்று மீது தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததாக திமுக மீது மறைமுக சாடல்...

ஏழைகளுக்கான நலத்திட்டங்களை பிரதமர் மோடி பலவீனப்படுத்துகிறார்... உத்தர பிரதேச மாநிலத்தில் தனது ராய் பரேலி தொகுதியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

கேரளாவில் சபரிமலை கோயிலில் தங்க முறைகேடு விவகாரம்... தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை..

தங்கம் விலை உயர பாஜகவினர் காரணம் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு... ஊழல் பணத்தில் அதிகளவு தங்கம் வாங்குவதால் விலை உயர்வதாக விளக்கம்...

கர்நாடகாவில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு... வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளதாக கூறி மாநில அரசு நடவடிக்கை...

கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாஎக்ஸ் தளம்

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு... கம்சத்கா தீபகற்பத்தில் 16 அடி வரை குவிந்த பனியால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்...

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது... ஒருநாள் தொடரை இழந்த நிலையில், இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சாய்னா நேவால்... தனது உடல்நலத்தை கருத்தில்கொண்டு முடிவெடுத்ததாக விளக்கம்...

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்... பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...

ஆளுநர் ஆர்.என் ரவி, ஜனநாயகன்
லிவ்-இன் உறவில் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com