விராட் கோலி, விஜய்
விராட் கோலி, விஜய்Pt Web

HEADLINES|சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் விஜய் TO ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 54-வது சதமடித்த கோலி.!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் விஜய் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 54-வது சதமடித்த கோலி வரை விவரிக்கிறது..
Published on

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்... உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல்...

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை 3 மடங்கு உயர்வு... ஐந்தாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததால் பயணிகள் அதிருப்தி...

பிற இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருது... 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு...

கலை இலக்கிய விருதில் அரசியல் தலையீடு ஆபத்தானது என முதல்வர் மு. க.ஸ்டாலின் கண்டனம்... மத்திய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால் சாகித்ய அகாடமி விருது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு...

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்web

தமிழக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், 71 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு... புதிய உத்வேகத்தை ஏற்படுத்தவும், அடிமட்ட அளவில் பணிகளை முடுக்கிவிடவும் நடவடிக்கை...

தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டும் பாஜக... மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தலைமையில் குழு அமைப்பு...

தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகளை தொடங்கும் தவெக... தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு...

கரூர் துயரம் தொடர்பாக இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் தவெக தலைவர் விஜய்... சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை...

முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவிருக்கும் கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிட சீமான் வலியுறுத்தல்... 16 கிராம மீனவர் வாழ்வாதாரம் பலிகொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு...

காரைக்காலில் களைகட்டிய கார்னிவெல் திருவிழா... வீட்டு செல்லப் பிராணிகளின் சாகசங்களை கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்...

வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலக வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

மம்தாவின் கொடூர ஆட்சிக்கு எதிராக மேற்குவங்க மக்கள் மாற்றத்தை தேடுவதாக பிரதமர் மோடி பேச்சு... திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வழியனுப்பு விழா நடத்த மக்கள் தயாராகிவிட்டதாகவும் விமர்சனம்...

bjp next plan election on west bengal
மோடி, மம்தா பானர்ஜிஎக்ஸ் தளம்

சந்திரசேகர ராவ்வின் பி.ஆர்.எஸ். கட்சியை வேரோடு அழிப்பதே ராமா ராவ்விற்கு செய்யும் உண்மையான நன்றிக்கடன்... தெலுங்கு தேசம் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி...

மெளனி அமாவாசையையொட்டி வடமாநிலங்களில் நீர்நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள்... முக்கிய கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து வழிபாடு...

காசாவிற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள 'அமைதி வாரியம்'... இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இணையுமாறு ட்ரம்ப் அழைப்பு...

கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு... ட்ரம்ப் அறிவித்த வரிவிதிப்பு எச்சரிக்கைக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம்...

தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை ட்ரம்ப்பிற்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மெச்சாடோ வழங்கியதற்கு கண்டனம்... நோபல் பரிசினை மற்றவர்களுக்கு கைமாற்றவோ, அன்பளிப்பாகவோ வழங்க முடியாது என நோபல் அறக்கட்டளை அறிவிப்பு...

இந்திய மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணி சாதனை... 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு ஒன்று என்ற கணக்கில் வென்று அசத்தல்...

விராட் கோலி
விராட் கோலிPt web

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி... சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 54ஆவது சதத்தை பதிவு செய்து சாதனை...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்... வைல்டு கார்டு மூலம் போட்டிக்குள் நுழைந்தவர் 24 வயது வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி...

யாரையும் புண்படுத்துவது தனது விருப்பம் இல்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு... மதக்காரணங்களுக்காக பாலிவுட் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற பேச்சு சர்ச்சையான நிலையில் விளக்கம்...

விராட் கோலி, விஜய்
54வது ODI சதம்.. இறுதிவரை தனி ஒருவனாய்ப் போராடிய விராட் கோலி.. தொடரைக் கைப்பற்றிய நியூசி.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com