ஜனவரி 15 காலைத் த்லைப்புச் செய்திகள்
ஜனவரி 15 காலைத் த்லைப்புச் செய்திகள்pt

HEADLINES|தற்கொலை செய்துகொண்ட பகுதிநேர ஆசிரியர் TO ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை.!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்தியானது, தற்கொலை செய்துகொண்ட பகுதிநேர ஆசிரியர் ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் மத்திய அரசு வரை விவரிக்கிறது..
Published on

பொங்கல் பண்டிகைக்கான இறுதிக்கட்ட ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டிய மக்கள்... கரும்பு, மஞ்சள் கிழங்கு, வாழை இலை உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்த மக்கள்...

தமிழர் திருநாளையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம்... சென்னையில் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்...

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 9.20 லட்சம் பேர் பயணம்... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்...

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்கான மேலும் ஒரு சிறப்பு ரயில்... நெல்லை-தாம்பரம் இடையே வரும் 18ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல்...

தைத்திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு... காலை 8 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரம்...

பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகைமுகநூல்

பொங்கல் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் செழிப்பு, மகிழ்ச்சியைகொண்டு வரட்டும்...பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து...

புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வேண்டுமென பொங்கல் திருநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து... எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்படுவதாகவும் பெருமிதம்...

பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து... தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் பேட்டி...

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு... பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டதாக பெருமிதம்...

டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பராசக்தி திரை நட்சத்திரங்கள்... இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியை உற்சாகத்துடன் கண்டுரசித்த பிரதமர் மோடி...

டெல்லி பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் சந்தித்ததை விமர்சித்த காங்கிரஸ் கட்சி... பராசக்தி திரைப்படம் பரப்புரைக்கான படம் அல்ல என நடிகர் சிவகார்த்திகேயன் பதில்...

பொங்கல் விழா
பொங்கல் விழாPt web

பறை இசைத்து சென்னை சங்கமத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்... வரும் 18ஆம் தேதி வரை 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிப்பு...

தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்... டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக தா.கிறிஸ்துராஜ் நியமனம்...

சென்னையில் போராட்டத்தின்போது விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு... தமிழக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனம்...

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு... எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என போராட்டக் குழுவினர் அதிருப்தி...

இடைநிலை ஆசிரியர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் என தகவல்... நல்ல முடிவு கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர்கள் அறிவிப்பு...

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்ததற்கு முக ஸ்டாலினை கண்டித்த இபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்ததற்கு முக ஸ்டாலினை கண்டித்த இபிஎஸ்pt

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம்... ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை சரண முழக்கமிட்டு கண்டு தரிசித்த பக்தர்கள்...

திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயிலில் வெகுவிமரிசையாக நடந்த லட்ச தீபவிழா... ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வில் திரளானோர் பங்கேற்று சாமி தரிசனம்...

மகாசங்கராந்தியையொட்டி உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் திரளானோர் புனித நீராடல்... கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவியும் பக்தர்கள்...

நாட்டின் வர்த்தக தலைநகரை கைப்பற்றப்போவது யார்?... மஹாராஷ்டிராவில் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல்...

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று தொடர்பான வழக்கு... உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை என தகவல்...

ஈரானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு... மரண தண்டனை விதிக்க ஈரான் உச்ச நீதிமன்றம் பரிந்துரை...

ஈரான் போராட்டாக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காமேனி அதிரடி உத்தரவு
ஈரான் போராட்டாக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காமேனி அதிரடி உத்தரவுweb

பதற்றமான சூழல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை... இந்தியர்கள், ஈரானை விட்டு உடனே வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் வேண்டுகோள்...

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் கருத்து... அமெரிக்கா இல்லாவிட்டால் ரஷ்யா அல்லது சீனா கைப்பற்றிவிடும் எனவும் பேச்சு...

ரஷ்யா, ஈரான், ஈராக் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா... 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருமென தகவல்...

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி... டேரில் மிட்செல் சதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி...

பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்... முதல்நாள் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி...

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 வெற்றி
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 வெற்றிcricinfo

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்... வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com