HEADLINES|அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி சாதனை TO முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்.!
இ.ஓ.எஸ். என்-1 உள்பட 17 செயற்கைக்கோளுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்... நடப்பாண்டின் முதல் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளதால், இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரம்...
இலங்கைத் தமிழர் உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு வரை உயர்வு... கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்சரிக்கை...
செங்கல்பட்டு, சேலம், ஆத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை... ஊட்டி, கொடைக்கானலில் பெய்த சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...
ஜனவரி மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி பேச்சு... 1.13 கோடியில் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் மகளிர் பயன்பெறுவதாகவும் பெருமிதம்...
கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார்... ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கு கேட்கும் சூழலில் அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்...
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதில் மதிமுகவுக்கு உடன்பாடில்லை... கட்சியின் பொதுச் செயலர் வைகோ திட்டவட்டம்...
கரூர் துயரம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகும் விஜய்... தவெகவின் கோரிக்கையை ஏற்று போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என டெல்லி காவல் துறை உறுதி...
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல்... மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை...
கூட்டணி தொடர்பாக திமுகவும் பேசவில்லை, பாஜகவும் பேசவில்லை... பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி...
சென்னையில் தொடரும் பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம்... பொங்கல் விடுமுறையிலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் திட்டவட்டம்...
சென்னையில் வடபழனி-போரூர் இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு... பிப்ரவரி 2ஆவது வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு...
கேரள மக்கள் பாஜக முதல்வரை காணும் நேரம் வெகு தூரம் இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரை... வளர்ச்சி என்பதை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் பேச்சு...
மத்திய அரசு அறிவித்த காற்றுத் தூய்மை திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக காங்கிரஸ் விமர்சனம்... மேலும் 1000 நகரங்களில் காற்றை தூய்மையாக்க 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்...
மக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் ஈரான்... போராட்டத்தை கைவிட வேண்டாம் என நாடு கடத்தப்பட்ட இளவரசர் ரெசா பஹ்லவி கோரிக்கை...
சமூக அமைதியைக் குலைக்கும் கலவரக்காரர்களை அனுமதிக்க முடியாது... ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் திட்டவட்டம்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி... 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி... 28 ஆயிரத்து 17 ரன்களை குவித்து இலங்கை வீரர் சங்ககாராவை பின்னுக்குத் தள்ளி சாதனை...
பிரிஸ்பென் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவில் டேனில் மெத்விதேவ் சாம்பியன்... மகளிர் பிரிவில் தொடர்ச்சியாக 2ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று சபலென்கா அசத்தல்...

