HEADLINES | U/A சான்றுடன் இன்று பராசக்தி ரிலீஸ் TO சேகர்பாபுவுக்கு எதிராக ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி!
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு... புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என தகவல்...
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு... திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடப்பதால், உச்சக்கட்ட கண்காணிப்பு...
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி... கடலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்...
நெல்லை மாவட்டத்தில் 90 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாம்... கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்...
பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்... தணிக்கைச் சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்...
ஜனநாயகன் தணிக்கைச் சான்று வழக்கில் இனி 21ஆம் தேதியே விசாரணை... தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...
ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகததற்கு மன்னிப்பு கோரியது படத் தயாரிப்பு நிறுவனம்... விஜய்க்கு நிச்சயம் ஃபேர்வெல் நடத்த வேண்டுமெனவும் வெங்கட் கே நாராயணன் பேச்சு...
25 திருத்தங்களுடன் பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்... திட்டமிட்டபடி படம் இன்று வெளியாகும் நிலையில் வேகமாக விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்...
பராசக்தி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் பேச்சு அடங்கிய காட்சி புரோமோவாக வெளியீடு... தணிக்கை வாரியம் நீக்கிய நிலையில், இணையத்தில் அமோக வரவேற்பு...
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் மத்திய பாஜக அரசின் ஆயுதமாக மாறிவிட்டது சென்சார் போர்டு... தணிக்கை வாரியத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்...
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்... பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உதவி மையம், முன்பதிவு கவுன்டர்கள் திறப்பு...
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... உறுப்பினர்கள் நியமனத்தில் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் நடவடிக்கை...
மக்களிடம் கருத்துகளை கேட்டு தமிழ்நாட்டுக்கான மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிப்போம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி... தொலைநோக்குப் பார்வையுடன் அந்தத் திட்டம் இருக்கும் என்றும் பேச்சு...
அதிமுக வேட்பாளர் நேர்காணலை தொடங்கினார் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி... பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்த நிலையில் தொடங்கியது நேர்காணல்..
தமிழகத்தில் பிற மொழிகள் தொடர்பாக அறிவில்லாமல் செய்ததற்கு திமுகவே காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு... 2026இல் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி மலரும் எனவும் பேச்சு...
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறக்கூடாது என செல்வப்பெருந்தகை கண்டிப்பு... கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சி வென்றால் பாஜகவுக்கே பலன் என்றும்கருத்து...
யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுத்துவிட்டேன்... ஆனால், நிதானமாக யோசித்து முடிவை அறிவிப்பேன் என்று கடலூர் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு...
தேமுதிக இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் பேச்சு... தொண்டர்கள் எண்ணப்படியே கூட்டணி அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு...
அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி... வழக்கறிஞர் சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்...
தேமுதிக பேரம் பேசுகிறது என்ற விமர்சிப்போருக்கு விஜயபிரபாகரன் கடும் கண்டனம்... 2005க்கு முன் விஜயகாந்த்துக்கு என்ன சொத்து இருந்தது இப்போது என்ன சொத்து இருக்கிறது என்று கேள்வி...
தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக மாநாட்டில் விஜயபிரபாகரன் வேண்டுகோள்... காங்கிரஸ் போடும் தூண்டிலில் சிக்கிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை...
தவெகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தார் கட்சியின் தலைவர் விஜய்... அருண்ராஜ், ஜே.சி.டி.பிரபாகர், ராஜ்மோகன் உள்ளிட்ட 12 பேருக்கு குழுவில் இடம்...
வருமானத்தை மறைத்ததாகக் கூறி விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது தவறில்லை... சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தரப்பு வாதம்...
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை... மாவட்ட ஆட்சியர், காவல் துறை துணை ஆணையரை மன்னிக்க இயலாது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து...
தீபமேற்ற வேண்டாம் என்ற முடிவை கோயில் செயல் அலுவலர் தானாக எடுத்தாரா அல்லது அமைச்சர் சேகர் பாபு சொன்னாரா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி...
சென்னையில் போரூர்-வடபழனி வழித்தடத்தில் இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்... மின்சார விநியோகம் தொடர்பாக 6 கிலோமீட்டர் தூரம் ரயில்களை இயக்கி சோதிக்கவிருப்பதாக தகவல்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு... இரண்டு கட்டங்களாக கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தகவல்...
அமலாக்கத் துறைக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி நடத்திய மம்தா பானர்ஜி... நிலக்கரி ஊழல் வழக்கில் அமித் ஷாவிற்கு எதிரான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பேச்சு...
இமாச்சல் பிரதேசத்தில் மலைப் பள்ளத்தாக்கில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழப்பு... உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்து பிரதமர் மோடி இரங்கல்...
டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி... வீடற்றவர்கள் தங்கும் இரவு நேர தங்கும் விடுதியில் நிரம்பி வழியும் மக்கள்கூட்டம்...
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சண்டையை தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு... அமைதிக்கான நோபல் பரிசுக்கு தம்மை தவிர வேறுயாரும் உலகில் தகுதியானவர் இல்லை என்றும் கருத்து...
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 500 விழுக்காடு வரிவிதிப்பு தொடர்பான வழக்கு... வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒத்திவைத்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.
ஈரானில் தீவிரமெடுக்கும் மக்கள் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு... போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என விமர்சித்து, எச்சரித்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி...
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய பெங்களூரு அணி... மும்பை அணியுடனான ஆட்டத்தை 3விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுஅசத்தல்...

