morning headlines for february 9th 2026
pm modi, Anwar Ibrahim, canadaAFP, Reuters

Headlines | இந்தியா - மலேசியா ஒப்பந்தங்கள் முதல் ஐஸ் ஹாக்கியில் வெற்றிபெற்ற கனடா வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இந்தியா - மலேசியா ஒப்பந்தங்கள் முதல் ஐஸ் ஹாக்கியில் வெற்றிபெற்ற கனடா வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இந்தியா - மலேசியா ஒப்பந்தங்கள் முதல் ஐஸ் ஹாக்கியில் வெற்றிபெற்ற கனடா வரை விவரிக்கிறது.

  • இந்தியா - மலேசியா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து... பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என பிரதமர் மோடி பேச்சு..

  • குளறுபடி காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைப்பு... தேர்வு மையம் ஒதுக்காதது, வினாத்தாள் கிடைக்காததால் குழப்பம்... தேர்வெழுத வந்தவர்கள் சாலை மறியல்...

  • டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றம்... குரூப்-2, 2ஏ தேர்வுகளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் தமிழக அரசு நடவடிக்கை..

  • இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு... தேர்வெழுத மார்ச் 8ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தகவல்...

  • திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழுந்துவிட்டதாக எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்... இந்தியா கூட்டணி என அடிக்கடி பேசும் முதல்வர் தற்போது அந்த வார்த்தையை ஏன் பயன்படுத்துவதில்லை என்றும் கேள்வி...

morning headlines for february 9th 2026
எடப்பாடி பழனிசாமிpt web
  • தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு தீர்வு காண தேசிய தலைமை திட்டம்... பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்க மேலிட தலைவர் பி.எல்.சந்தோஷ் இன்று சென்னை வருகை என தகவல்...

  • சேலம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வாக மாற்றிய தவெக தலைமை... விஜய் கூட்டத்திற்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி..

  • கடலூர் மாவட்டம் வேப்பூரில் இந்திய ஜனநாயக கட்சியின் 4ஆவது மாநில மாநாடு... கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து...

  • ஜப்பான், தாய்லாந்து, போர்ச்சுகல் நாடுகளில் ஒரே நாளில் நடந்த பொதுத் தேர்தல்... ஆட்சி மாற்றம் வேண்டி ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்...

  • குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஐஸ் ஹாக்கியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய கனடா...

morning headlines for february 9th 2026
விறுவிறுப்பாக நடைபெறும் சீனா குளிர்கால ஒலிம்பிக் - பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நார்வே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com