Headlines | சென்னையில் பறவைக் காய்ச்சல் நோய் பரவல் to எதிர்க்கட்சிகள் மீது மோடியின் குற்றச்சாட்டு!
முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல்... 34 ஆயிரத்து 237 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்த அமைச்சரவை...
125 நாள் வேலை உறுதித் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு... வரும் 13ஆம் தேதி அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு...
மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது... பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்...
சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்... உங்களை சுத்தி சுத்திதானே வந்தேன்... ஏன் தோல்வியை தந்தீர்கள் எனவும் கேள்வி...
சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று முதல் விருப்ப மனுவை விநியோகிக்கும் தேமுதிக தலைமை... கூட்டணி இறுதியாகாத நிலையில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேமுதிக...
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு... இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்...
விஜய்யால் தமிழ்நாட்டைப் பாதுகாக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்... தன்னை சார்ந்தவர்களையே காப்பாற்றாமல் ஓடியவர் விஜய் என்றும் தாக்கு...
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயரை மாற்றத்திற்கு எதிர்ப்பு... செல்வப்பெருந்தகை தலைமையில் பேரணியில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸார்...
முற்றிலும் மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்... சென்னையில் பறவைக் காய்ச்சல் நோய் பரவல் கண்டறியப்பட்ட நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்று வழங்க முடியாது... சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டம்...
மணிப்பூரில் புதிய அரசு பதவியேற்ற நிலையில் மீண்டும் வெடித்த போராட்டம்... பாஜக அமைச்சரவையில் குக்கி சமூக எம்.எல்.ஏக்கள் இணைந்ததிற்கு வலுக்கும் கண்டனம்...
திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்தது கடவுளுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய பாவம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு... தவறு குறித்து ஆராயவும் பிரச்சினைகளை சரி செய்யவும் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு..
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்...
ரயில்களில் ஆர்ஏசி பயணிகளிடம் முழு கட்டணம் வசூலிப்பது நியாயமனதல்ல என நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலைக்குழு அறிக்கை... பகுதியளவு பணத்தை திரும்பத் தரும் நடைமுறையை ஏற்படுத்த பரிந்துரை...
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முதல்முறையாக பிரதமர் பதிலளிக்காமலேயே நிறைவேற்றம்... எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்....
மக்களவையில் உரையாற்றாமல் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி... கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு...
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உடனான இந்தியாவின் ஒப்பந்தத்தை உலகமே பாராட்டுவதாக பிரதமர் மோடி பெருமிதம்... நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை என்றும் சாடல்...
காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி... பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்தவர்கள், தங்களது பாக்கெட்களை நிரப்புவதிலேயே குறியாக இருந்ததாக குற்றச்சாட்டு...
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழித்ததால் தனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு...
பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்க திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு... பாதுகாப்பு கருதி அவைக்கு வரவேண்டாம் என தான்தான் பிரதமரிடம் கூறியதாகவும் விளக்கம்...
பிரதமரை தாக்க முயற்சி என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என பிரியங்கா காந்தி மறுப்பு... சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் ஒளிந்துகொள்வதாகவும் விமர்சனம்...
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் வணிக லாபம் அடிப்படையில் முடிவு... இறையாண்மை கொள்கையில் மாற்றமில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்...
அபுதாபியில் நடந்த ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையேயான இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு... கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட குறிப்பிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்...
கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின், போர்ச்சுகல் நகரங்கள்... தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு...
கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் மூழ்கிய கொலம்பியா நகரங்கள்... மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இதுவரை 31 ஆயிரம் குடும்பங்கள் பத்திரமாக மீட்பு...
தென் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் நீரில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகள்... வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிக மக்கள் மீட்பு...
அமெரிக்காவில் வாசிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் நடந்த வேலைநீக்கத்திற்கு எதிர்ப்பு... பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்...
இரண்டாவது முறையாக மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணி... இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இன்று இறுதிப் போட்டி... சாம்பியன் பட்டத்திற்காக மோதும் இந்தியா, இங்கிலாந்து அணிகள்...

