morning headlines for february 4th 2026
யும்னம் கெம்சந்த் சிங், india u19x page

Headlines | மணிப்பூரின் புதிய முதல்வர் தேர்வு முதல் U19 WCஇல் இந்தியாவின் பலப்பரீட்சை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மணிப்பூரின் புதிய முதல்வர் தேர்வு முதல் U19 WCஇல் இந்தியாவின் பலப்பரீட்சை வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மணிப்பூரின் புதிய முதல்வர் தேர்வு முதல் U19 WCஇல் இந்தியாவின் பலப்பரீட்சை வரை விவரிக்கிறது.

  • தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

  • மணிப்பூரில் பிப்ரவரி 12ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், அங்கு மீண்டும் மக்களாட்சியை அமல்படுத்தும் நோக்கில் யும்னம் கெம்சந்த் சிங் புதிய முதல்வராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடக்கிறது அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்... தேர்தல் பணிகள், தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திட்டம் என தகவல்

  • 234 தொகுதிகளுக்கும் விருப்பமனுவை விநியோகிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. வரும் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மனுக்களை பெறலாம் என அறிவிப்பு..

  • பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விலகல்... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும் நேரமும்தான் பதில் சொல்லும் என பேட்டி...

morning headlines for february 4th 2026
யும்னம் கெம்சந்த் சிங்எக்ஸ் தளம்
  • ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தப்போவதாக இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை - ரஷ்ய அதிபர் மாளிகை விளக்கம்

  • மாணிக்கம் தாகூர், சு.வெங்கசேடன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து இடைநீக்கம்... சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசி எறிந்ததற்காக நடவடிக்கை...

  • 19 வயதுட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய அரையிறுதியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்களூருவை எதிர்க்கொள்ளும் டெல்லி அணி...

    எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது ஜெமிமாவின் படை...

  • இரண்டாவது சிம்பொனி குறித்த அப்டேட்டை பகிர்ந்த இளையராஜா... இசைக் கோர்வைகளை எழுதும் பணி இறுதி கட்டத்தை அடைந்துவிட்டதாக பதிவு..

morning headlines for february 4th 2026
மணிப்பூரின் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு.. ஒரு வருடத்திற்கு பின் மக்களாட்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com