பிப்ரவரி 2ஆம் தேதி காலைத் தலைப்புச் செய்திகள்
பிப்ரவரி 1ஆம் தேதி காலைத் தலைப்புச் செய்திகள்web

Headlines | இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் TO முருகன் கோயில்களில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா!

புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் முதல் தமிழகத்தில் முருகன் கோயில்களில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா வரை விவரிக்கிறது..
Published on

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை... தேரோட்டம், திருக்கல்யாணம் உள்ளிட்டவைபவங்களில் பக்தர்கள் பங்கேற்றுதரிசனம்...

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்... திருச்செந்தூர், பழனி கோயில்களில் கட்டண தரிசனம் ரத்து...

நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... விலைவாசி, வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா?...

9ஆவது முறையாக மத்திய நிதியமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்...சலுகைத் திட்டங்கள்... சீர்திருத்தங்கள்இருக்குமா என நாட்டு மக்கள்எதிர்பார்ப்பு...

தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு 7ஆயிரத்து 600 ரூபாய் சரிவு.. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை..

ஒரே நாளில் கிலோவுக்கு 85ஆயிரம் ரூபாய் குறைந்தது வெள்ளி விலை... சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கு விற்பனை..

 மத்திய பட்ஜெட் - 2024-25
மத்திய பட்ஜெட் - 2024-25கோப்பு படம்

அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷ் பெயரை பரிந்துரைத்தார் அதிபர் ட்ரம்ப்... வார்ஷ் டாலரை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உலகெங்கும் தங்கம் விலை சரிவு...

பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 34.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்...

தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாதவர் எடப்பாடி கே.பழனிசாமி என மு.க.ஸ்டாலின் விமர்சனம்... கொடுத்த எந்த வாக்குறுதியையும் அதிமுக நிறைவேற்றியது இல்லை என்றும் குற்றச்சாட்டு...

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சனம்... ஹிட்லர், முசோலினி, நீரோ வரிசையில் ஸ்டாலின் இருப்பதாகவும் கடும் சாடல்...

ஹிட்லரை வீழ்த்தியது ஸ்டாலினின் செம்படைதான் என்று அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை... ஸ்டாலினின் படை மீண்டும் ஆட்சியமைக்கும்; எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பழனிசாமி இழப்பார் என்றும் கருத்து...தவெக தலைவர் விஜய்க்கு ரோல் மாடல் யார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் கேள்வி... “எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ரோல் மாடல் என்றால் கொள்கை தலைவர்கள் என விஜய் கூறும் ஐவர் யார் என்றும் கேள்வி...

முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமிweb

தமிழ் மன்னர்கள் குறித்த திருமாவளனின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலர் தினகரன் கண்டனம்... தமிழ் நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை...

பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் பரப்புரையில் இறங்கும் திமுக.... அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...

காங்கிரஸ் இதுவரை ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை... காங்கிரஸை எப்படி அரவணைப்பது என்பது தங்களுக்கு தெரியும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...

தவெகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என செல்வப்பெருந்தகை பேட்டி... நிர்பந்தத்தால் உருவானது அதிமுக - பாஜக கூட்டணி எனவும் விமர்சனம்...

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வேலூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்வதாக தகவல்... மக்கள் சந்திப்பிற்கான இடத்தை தேர்வு செய்து, காவல் துறை அனுமதி பெற தவெக நிர்வாகிகள் மும்முரம்...

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

தவெக தலைவர் விஜய்க்கு ரோல் மாடல் யார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் கேள்வி... “எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ரோல் மாடல் என்றால் கொள்கை தலைவர்கள் என விஜய் கூறும் ஐவர் யார் என்றும் கேள்வி...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்... திமுகவின் வாக்குகளைச் சிறிய அளவில் விஜய் பிரிக்கக்கூடும் என்றும் தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கருத்து...

பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ராமதாஸ் நேர்காணல்... கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என ராமதாஸ் பேட்டி...

அன்புமணிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணைய கடிதத்தை ரத்து செய்யக்கோரிய மனு... பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை...

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு... பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று முடிவு...

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்Pt web

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பிரதிநிதிகள் குழு சந்திப்பு... பாலஸ்தீனத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதி...

மஹாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார்... விளையாட்டு, சிறுபான்மை நலன், கலால் ஆகிய துறைகள் ஒதுக்கீ்டு....

நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக மம்தா பானர்ஜியின் அரசு உள்ளது... மேற்குவங்க பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா குற்றச்சாட்டு...

இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்... அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயகத்தின் எதிரிகள் என போராட்டக்குழுவினர் கருத்து...

பாகிஸ்தானின் மூன்று மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் அதிரடி.... துப்பாக்கிச்சூட்டில் 67 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...

குடியேற்றத்துறையின் செயல்பாடுகளை கண்டித்து அமெரிக்க நகரங்களில் வலுக்கும் போராட்டங்கள்... ட்ரம்ப்பிற்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்Pt web

அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் தீவிர நெருக்கடிக்கு உள்ளான கியூபா... எரிபொருள் தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டால் தவிக்கும் மக்கள்....

25ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற நோவக் ஜோகோவிச்முனைப்பு... ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அல்காரஸுடன்பலப்பரீட்சை...

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா... இறுதிப்போட்டியில், உலகின் முதல்நிலை வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி அபாரம்...

நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி... 43 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்இந்திய வீரர் இஷான் கிஷன்...

உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் கடைசி பாகம்... 2028ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வெளியாகும் என நடிகர் வின் டீசல் அறிவிப்பு...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com