Headlines | 3 முறை தமிழகம் வரும் மோடி TO சீன ரோபோவை காட்டியது இழுக்கு என ராகுல் விமர்சனம்!
ரமலான் மாதம் தொடங்கியதாக தமிழக தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வ அறிவிப்பு... சிறப்பு தொழுகையுடன் நோன்பு கடைபிடித்த இஸ்லாமியர்கள்...
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்... நாளை முதல் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
பிப்ரவரி 26, 27ஆம் தேதிகளில் தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார்... தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்...
மாநிலங்களவையில் காலியாகும் 37 இடங்களுக்கு மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு மகாராஷ்டிரா, பிஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து என்.டி.ஏ. கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு...
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு... திமுக, அதிமுகவின் நிலைப்பாடு குறித்து எழும் கேள்வி...
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதம் 3 முறை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி... மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்...
மார்ச் 1ஆம் தேதி மதுரை வரும் மோடி, திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்... மார்ச் 6ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த வேலூர் பயணம், 7ஆம் தேதிக்கு மாற்றம்...
மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி என மீண்டும் சட்டமன்றத்தில் அறைகூவல் விடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்... கூட்டாட்சி அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில் அரசமைப்பு சட்டத்தை திருத்தவும் வலியுறுத்தல்...
முதல்வரின் மாநில சுயாட்சி பரிந்துரைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு... அரசமைப்பு சட்டத்தை பாஜக மதிப்பதில்லை எனவும் காட்டம்...
விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு... செய்த சாதனைகளை கூட சொல்லி அதிமுக விளம்பரம் தேடியது இல்லை என்றும் பேச்சு...
ஓராண்டில் 11.19% பொருளாதார வளர்ச்சி என்ற அரசின் கூற்று வேடிக்கையானது என கே.பழனிசாமி விமர்சனம்... திமுக, அதிமுக என பல ஆண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சியின் தொடர்ச்சிதான் இன்றைய நிலை என்றும் விளக்கம்...
விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்... சென்னையில் அமையவிருக்கும் சர்வதேச விளையாட்டு நகரத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்...
மீண்டும் அமைச்சர் ஆனால் விளையாட்டு வீரர்கள் விடுதிகளில் ஏசி அமைப்பதற்காகவே தனது முதல் கையெழுத்து இருக்கும்... சென்னையில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு...
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 42 தமிழக அரசியல்கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்... தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...
சட்டமன்றத் தேர்தலுக்கு நாளை முதல் விருப்ப மனு பெறுகிறது திமுக... பொதுத் தொகுதிக்கு 25 ஆயிரம் ரூபாய், மகளிர், தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயம்...
வரும் 23ஆம் தேதி கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குகிறது திமுக... முதலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை...
திருச்சி மாநாட்டில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கிறது நாம் தமிழர் கட்சி... தாம் போட்டியிடும் தொகுதியையும் அறிவிக்கவுள்ளதாக சீமான் பேட்டி...டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோட்டை நம்முடையது போல் காட்டியது நாட்டின் நற்பெயருக்கு இழுக்கு என ராகுல் காந்தி விமர்சனம்... சீன ரோபோட்டுகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டி பேசியது வெட்கக்கேடு என்றும் பேச்சு...
இந்தியா கூட்டணியின் தலைமை பொறுப்பை ஸ்டாலின் அல்லது மம்தா ஏற்க வேண்டும்... மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி வலியுறுத்தல்...
நெல்லை வி.கே.புரம் பகுதியில் 10க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய தெரு நாய்... 3 குழந்தைகள் உட்பட 10 பேர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதி...
நேபாளம், ஸ்பெயின், பின்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை... உலகின் முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர்...
டெல்லியில் நடக்கும் ஏஐ உச்சி மாநாடு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு... பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் இன்றைய அமர்வில் பங்கேற்பு...
டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோட்டை நம்முடையது போல் காட்டியது நாட்டின் நற்பெயருக்கு இழுக்கு என ராகுல் காந்தி விமர்சனம்... சீன ரோபோட்டுகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டி பேசியது வெட்கக்கேடு என்றும் பேச்சு...
ஏஐ மாநாட்டில் சீன ரோபோவை தங்கள் கண்டுபிடிப்பாக முன்னிறுத்திய பல்கலை. மன்னிப்பு கோரியது... அரங்கில் இருந்த எங்கள் பிரதிநிதிக்கு போதிய தகவல்கள் தெரிந்திருக்கவில்லை என விளக்கம்...
சபரிமலையில் தங்கம் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவருவுக்கு நிபந்தனை ஜாமீன்.. தங்கம் எடுக்கப்பட்ட தகவலை தெரிவிக்காமல் இருந்ததாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணை...
சென்னையில் தொடர்ந்து 4ஆவது நாளாக சரிந்த தங்கம் விலை... 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் குறைந்தது...
ரஷ்யா தனது வசம் உள்ள பெரும் பகுதி தங்க இருப்பை விற்று, அதை மீண்டும் டாலராக மாற்ற திட்டம்... இந்தியா, சீனாவும் விற்கும் பட்சத்தில் உலக சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரியும் என நிபுணர்கள் கணிப்பு...
உலகம் முழுவதும் ரமலான் மாத நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள்... காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் சிதைத்த மசூதி அருகே சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள்...
ஒருபுறம் பேச்சுவார்த்தை... மறுபுறம் போர் பயிற்சி... அமெரிக்காவை கையாள புதிய யுக்தியை கடைபிடிக்கும் ஈரான்...
ஈரான் துறைமுகத்திற்கு ரஷ்ய போர் கப்பல் வருகை... அமெரிக்கா படைகளை குவித்து வருவதால், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் ஈரான் கடற்படை...
சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில்12 பேர் உயிரிழப்பு... வசந்தகால புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்தியில் நடந்த சோகம்...
டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி... நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூர்யகுமார் தலைமையிலான நீலப்படை...
தொடர்ந்து 3 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்த இந்திய வீரர் அபிஷேக் சர்மா. இது அவருடைய முதல் உலகக்கோப்பை என்பதால், விளையாடிய 3 போட்டியிலும் வரிசையாக 0 ரன்னில் அவுட்டானது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 102 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வென்ற பாகிஸ்தான்... சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது பாகிஸ்தான் அணி...

