Headlines | 4 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி முதல் வங்கதேச பதவியேற்பு வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 4 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி முதல் வங்கதேச பதவியேற்பு வரை விவரிக்கிறது.
புதிய அலுவலகத்தில் 4 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி... விபத்தில் சிக்குவோருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்க பிரதமர் மோடி உத்தரவு...
வங்கதேசத்தில் ஆட்சியமைக்கிறது வங்கதேச தேசியவாத கட்சி... நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான்...
காரைக்காலில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்கிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பிப்ரவரி 16ஆம் தேதி ஆந்திரா வருகை தர உள்ள நிலையில், அன்றைய தினம் மருத்துவ சிகிச்சை திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெறும் 27 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 6 புள்ளி 711 பில்லியன் டாலர் குறைந்து 717 பில்லியன் டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 7 மாநகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில், 1,500க்கும் மேற்பட்ட வார்டுகளைக் கைப்பற்றியது.
ஷேக் ஹசீனாவைத் திருப்பி அனுப்பும்படி இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கை விடுக்க புதிதாக அமைய உள்ள வங்கதேச தேசியவாதக் கட்சி அரசு திட்டமிட்டுள்ளது.
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுத் தலைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த திரைப்பட விழாவை புறக்கணிக்க அருந்ததி ராய் முடிவுசெய்துள்ளார்.

