Headlines | புதிய அலுவலகத்தைத் திறக்கும் பிரதமர் மோடி முதல் வங்கதேச தேர்தல் வெற்றி வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அலுவலகத்தைத் திறக்கும் பிரதமர் மோடி முதல் வங்கதேச தேர்தல் வெற்றி வரை விவரிக்கிறது.
இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா... திருச்சி நட்சத்திர விடுதியில் பாஜக மாநில தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை...
சேலத்தில் இன்று விஜய் தலைமையில் நடைபெறுகிறது தவெக நிர்வாகிகள் கூட்டம்... நுழைவுச்சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் பிரவீன் சக்கரவர்த்தி... ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் சந்திப்பு...
தேமுதிக யாருடனும் கூட்டணி பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்... ராஜகண்ணப்பன் எப்படிப்பட்டவர் என்பதை மக்களே அறிவர் என்றும் பதிலடி
தலைநகர் டெல்லியில் பிரதமருக்கான புதிய அலுவலகம் இன்று திறப்பு... சேவா தீர்த் என்ற பெயரிலான அலுவலகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...
பிரான்ஸிடமிருந்து மூன்றே கால் லட்சம் கோடி ரூபாய் செலவில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை ஒப்புதல்..
காஷ்மீரில், ஜம்மு - ஸ்ரீநகர் இடையேயான விஸ்டாடோம் ரயில் சேவை கத்ரா வரை நீட்டிப்பு... வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நடவடிக்கை...
நாடாளுமன்ற தேர்தலில் 151க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி... பிரதமராகும் தாரிக் ரஹ்மான்..
ஹெச்-1பி விசா திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரும் 'எக்ஸைல்' மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்...
சீனாவால் பெரு நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என அமெரிக்கா எச்சரிக்கை... பெருவில் சீனா அமைத்த துறைமுகத்தை கண்காணிக்க அரசுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் கூறிய நிலையில் எச்சரிக்கை...
ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை அறிவித்தது சவுதி அரேபிய அரசு... ஒட்டகங்கள் விற்பனை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் அறிமுகம்..
டி20 உலக கோப்பை தொடரில் 2ஆவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா... நமீபியாவை எளிதில் வீழ்த்தியது...
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆவணக் கட்டணமாக 10 லட்சம் ரூபாய் செலுத்த கிரிக்கெட் வீரர் தோனிக்கு உத்தரவு...
122 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பந்தை பிடித்து கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர் உலக சாதனை... இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் முன்னிலையில் கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்...

