morning headlines for february 12th 2026
வேலை நிறுத்தம், மழைஎக்ஸ் தளம்

Headlines | இன்று பொது வேலைநிறுத்தம் முதல் மழை எச்சரிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பொது வேலைநிறுத்தம் முதல் மழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பொது வேலைநிறுத்தம் முதல் மழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

  • நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு... பொது சேவை நிறுவன ஊழியர்கள் பங்கேற்பதால், அரசு அலுவலக வேலைகள் பாதிக்கும் அபாயம்...

  • தென் தமிழகத்தில் நாளை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு... வட மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தகவல்...

  • நாட்டை பலவீனப்படுத்தியது காங்கிரஸ்தான்... ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்..

  • பொது நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடுவதற்கு முன் முழுமையான வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்... அரசின் வழிகாட்டு விதிமுறைகளில் புதிய அம்சத்தை சேர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு...

  • கூட்டணியைவிட்டு வெளியேறுவதற்கு காரணம் தேடுகிறது காங்கிரஸ்... திமுக - காங்கிரஸ் பிரச்சினை குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து...

morning headlines for february 12th 2026
ராகுல் காந்திpt web
  • அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டையே விற்றுவிட்டார் பிரதமர் மோடி... அதானியின் வழக்கை காட்டி மோடியின் கழுத்தை அமெரிக்கா நெரித்துவிட்டதாக ராகுல் காந்தி கடும் தாக்கு..

  • மண்டல, மகர விளக்கு பூஜைக் காலத்திற்குப் பின் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு... வரும் 17ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என தேவஸ்வம் போர்டு தகவல்...

  • பட்ஜெட் ஒதுக்கீட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை... உள்கட்டமைப்பு, ஏஐ, வேலைவாய்ப்புக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்...

  • வங்கதேசத்தில் இன்று நடைபெறுகிறது நாடாளுமன்ற தேர்தல்... ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக நடைபெறும் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...

  • டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா... இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்ற போட்டியில் த்ரில் வெற்றி...

morning headlines for february 12th 2026
T20 WC | திடீர் யூ-டர்ன் அடித்த பாக்.. 3 கோரிக்கைகள் நிராகரிப்பு.. இந்தியாவுடன் விளையாடுவது உறுதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com