HEADLINES | இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை!
இன்றைய தலைப்புச் செய்தியானது இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் முதல் முதல்வர் தலைமையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு வரை விவரிக்கிறது.
விமானச் சேவை பாதிப்பு குறித்து விளக்கம் கேட்டு இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்... விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை...
விமான நிறுவனங்களுக்கு கட்டண வரம்பை அறிவித்தது மத்திய அரசு... விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்ததால் நடவடிக்கை...
மதுரையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு... 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அரசு தகவல்...
சென்னையில் நாளை திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்.. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என பொதுச்செயலர் துரைமுருகன் அறிவிப்பு...
பாமக தலைவர் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு...
புதுச்சேரியில் வரும் 9ஆம் தேதி நடக்கும் விஜய் பொதுக்கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி... கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதியில்லை என காவல் துறை நிபந்தனை...
தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை...
கடலோர தமிழகம், உள் தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை மழை தொடரும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
அதிநவீன ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு ஈரான் போர் பயிற்சி... இஸ்ரேலுடன் சண்டை முடிந்து 6 மாதங்களில் மீண்டும் படைகளை பலப்படுத்த திட்டம்...
கேரம் உலக கோப்பையில் 3 தங்கப் பதங்களை வென்றார் சென்னை வீராங்கனை கீர்த்தனா... குழு பிரிவில் இந்தியாவின் கீர்த்தனா, காசிமா, மித்ரா, காஜல் குமாரி ஆகியோர் தங்கம்...

