டிசம்பர் 11 காலை தலைப்புச் செய்திகள்
டிசம்பர் 11 காலை தலைப்புச் செய்திகள்pt

HEADLINES | எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி To திடீரென மோடியை அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் நிறைவு முதல் பிரதமர் மோடியை திடீரென தொடர்புகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்..
Published on

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு... பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவுஅளிக்கும் என பிரதமர் மோடி உறுதி....

வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இடையே காரசார விவாதம்... தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் தான் எஸ்.ஐ.ஆரை பயன்படுத்தியதாக அமித் ஷா குற்றச்சாட்டு...

இந்தியாவில் முதன்முதலில் நடந்த தேர்தலில் வாக்குத்திருட்டு மூலமே நேரு பிரதமர் ஆனார்... மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் குற்றச்சாட்டு...

ஓட்டு திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் விவாதிக்கத் தயார் என அமித் ஷாவுக்கு ராகுல் காந்திஅழைப்பு...ஹரியானா வாக்காளர் பட்டியல்முறைகேடு தொடர்பான கேள்விகளுக்குபதில் வரவில்லை என்றும் விமர்சனம்...

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்க வலியுறுத்தும் இண்டியா கூட்டணி... 107 எம்பிக்கள் சேர்ந்து அளித்துள்ள நோட்டீஸ் குறித்து சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தல்....

disqualification resolution against judge gr swaminathan
ஜி.ஆர்.சுவாமிநாதன்எக்ஸ் தளம்

தமிழகத்தின் புதிய பொறுப்பு டிஜிபியாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அபய்குமார் சிங் நியமனம்... வெங்கட்ராமன் 15 நாட்கள் மருத்துவ ஓய்வில் சென்ற நிலையில் கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு...

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை... தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 15 முக்கிய துறையினருடன் கலந்துரையாடல்...

எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள்... புதிய வாக்காளர்களை சேர்க்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை...

திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி... எடப்பாடி கே.பழனிசாமிக்கு கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் வழங்கிய அதிமுக பொதுக்குழு...

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்... அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை...

210 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று அக்கட்சியினரை உற்சாகமூட்ட சிரிக்காமல் பொய் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.... அர்த்தமற்ற அவதூறுகளால் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி அறிக்கை...

பாஜக எழுதிக்கொடுத்ததை அதிமுக பொதுக்குழுவில் பேசியுள்ளார் பழனிசாமி... காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்....

பிரிந்திருக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்... முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து...

தவெக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணிக்கு கடும் போட்டியாக இருக்கும்... அமமுக பொதுச் செயலர் தினகரன் பேட்டி...

தவெக மாவட்டச் செயலர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் விஜய்... சென்னை பனையூரில் இன்று நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு...

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டிட்டோஜாக் அமைப்பினர் அறிவிப்பு... வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசின் தலைமை செயலர் எச்சரிக்கை....

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 6 நாட்களுக்கு மிதமான மழை... சென்னையில் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

இன்று முதல் 3 நாட்களுக்கு தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும்.... மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்...

நாகர்கோவிலில் களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்... வண்ண மின்விளக்குகள், குடில்கள், நட்சத்திரங்கள், அலங்கார தோரணங்களால் ஜொலிக்கும் வீடுகள்...

சாவர்க்கரின் பெயரில் வழங்கப்படும் விருதை ஏற்கப்போவதில்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் திட்டவட்டம்...சசி தரூருக்கு முன்கூட்டியே தகவல்தெரிவிக்கப்பட்டதாக விருது வழங்கும்அமைப்பு விளக்கம்...

இண்டிகோ விமானங்கள்
இண்டிகோ விமானங்கள்web

இண்டிகோ விமானப்பயணிகளுக்கு ஏற்பட்ட அவதி குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்த டெல்லி உயர் நீதிமன்றம் .... முழு விவரங்களுடன் நேரில் வந்து விளக்கம் அளிக்க விமான நிறுவன தலைமை அதிகாரிக்கு விமானப்போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு...

இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டதற்காக, மக்களிடம் மன்னிப்பு கோரினார் நிறுவனத் தலைவர் விக்ரம் சிங் மேத்தா.... நிலைமையை சீராக்க வேண்டி இருந்ததால், அறிக்கை வெளியிட தாமதமானதாகவும் விளக்கம்...

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜப்பானில் நிலநடுக்கம்.... சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றாலும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்...

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் 8ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி... இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை 3க்கு 2 என்ற கணக்கில் பெனால்டி முறையில் வீழ்த்தி அபாரம்...

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய அணி... அர்ஜென்டினாவை 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல்...

Padayappa 2
Padayappa 2

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடரும் இந்திய ஜாம்பவான்களின் ஆதிக்கம்... பேட்டிங் தரவரிசையில் ரோகித் சர்மா முதலிடத்தில் நீடிக்கும் நிலையில் இரண்டாமிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி....

வெளியானது ‘படையப்பா’ திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான டிரைலர்... 1999இல் வெளியான ரஜினி படம் மீண்டும் ட்ரெண்ட் ஆனது...

தங்கம் விலை சவரனுக்கு 240 உயர்ந்து 96 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை... வெள்ளி விலை வரலாறு காணாத உச்சமாக ஒரு கிராம் 207 ரூபாயாக அதிகரிப்பு...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com